பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறையூர் நின்ற நம்பி 109 தொண்டு பூண்டு உய்ந்து போனான். 'நம்பி ஒரு வாள் கொடுத்தருள அத்தைக் கொண்டு பூமியை யடையத் தன் காலின் கீழே இட்டுக் கொண்டானென்றொரு ப்ரஸித்த உண்டாய்த்து' என்பது பெரிய வாச்சான்பிள்ளையின் வியாக்கியானம். எம்பெருமானின் திருவடிகளைப் பெற விருப்பமுடையவர்களை நோக்கித் திருநறையூர் மணிமாடம் சேருமாறு உலகிற்கு உபதேசிக்கின்றார் ஆழ்வார் (பெரி. திரு.6.6) எம்பெருமானின் திருவடியிணையை வணங்குமாறு நெஞ்சிற்கு ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாக உபதேசிக்கின்றார் (பெரி.திரு.6.9). இப்படி உபதேசிக்கும்போது பிராட்டியாரின் புருஷகாரத்தை மறந்தார் இலர். 'மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலைத் திருமார்பில் மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே அடைநெஞ்சே." (6.9:6) (மின் ஒத்த-மின்னலைப் போன்று: மருங்குல்-இடை, மன்ன - பொருந்தும்படி) என்று ஆழ்வார் கூறுவதைக் கண்டு மகிழலாம். 'எம்பெரு மானின் திருவெட்டெழுத்து மந்திரமே நமக்கு நன்று; தொண்டீர், அடியேன் நமோ நாரணமே என்று அநுசந்தியா நின்றேன். நீங்களும் அதனையே சொல்லுங்கள்' என்கின்றார் (6.10:7). ஒரு திருமொழியில் மாதர்கள்மீது மையல்கொள்வதும், அவர்கள் வெறுப்பதும், அவமானப்படுத்திப் பேசுவதுமான செயல்கட்கு இடங்கொடாமல் திருநறையூரைத் தொழுமாறு நெஞ்சிற்குப் பணிக்கின்றார்(6.4). திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்ப வனும், திருநாவாயில் உள்ளவனும், திருநீர்மலையில் சந்நிதி பண்ணியிருப்பவனும், திருமெய்யத்தில் திருக்கோயில் கொண்டிருப்பவனும் திருக்குடந்தையில் பள்ளிகொண்டிருப்ப வனும் ஆன எம்பெருமான்களை யெல்லாம் நறையூரில் கண்டதாகப் பேசுகின்றார் (6.8). மற்றும் ஒரு திருமொழியில் பிறப்பைப் போக்குமாறும், தன்மீது திருவருள் பொழியுமாறும், திருவடிகளைச் சேவிக்க அருளுமாறும் இன்னும் பல படியாகவும் நெஞ்சுருக வேண்டுகின்றார் (7.1). நாடேன் உன்னையல்லால் நறையூர் நின்ற நம்பி’ என்றும், 'நான் தான் உனக்கொழிந்தேன்' என்றும், 'என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன்' என்றும் மிக்க எக்களிப்போடு வேண்டுகின்றார்.