பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி இந்தச் சிந்தனைகளுடன் திருக்கோயிலை நோக்கி நடக் கின்றோம். திருக்கோயிலருகில் ஒடினதாகக் கூறப்பெறும் மணிமுத்தாறு என்ற நதி இன்று கண்ணுக்குப் புலனாகவில்லை. திருக்கோவிலுக்கு முன்புறத்தில் இருப்பது ஒரு பெரிய குளம்; 684 அடி நீளமும் 225 அடி அகலமும் கொண்டது; மூன்று பக்கம் இதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. இதைத்தான் இன்று 'மணி முத்தாறு’ என்று வழங்குகின்றனர். நறையூர் நின்ற நம்பிக்கு அணிவிப்பதற்குத் திருப்பாற்கடலிலிருந்து வைர முடியைப் பெரியதிருவடி (கருடாழ்வார்) எடுத்துக் போகும்போது அதிலுள்ள மணியொன்று சுழன்று இந்தப் புஷ்கரிணியில் விழுந்ததாகவும் அதனால்தான் இத்திருக்குளம் மணிமுத்தாறு என்று பெயர் பெற்றதாகவும் வரலாறு ஒன்று உள்ளது. இது மிகவும் புனிதமான தீர்த்தம்; இறங்கி நீராடுவதற்கும் வசதியாக உள்ளது. நாமும் இறங்கி நீராடுகின்றோம். திருக்கோயில் முகப்பில் நிரந்தரமாக ஒரு கொட்டகை போட்டு வைக்கப்பெற்றுள்ளது. வெய்யில் நாளில் திருத்தலப் பயணிகள் சற்று ஒய்வு எடுப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது. திருக்கோயில் முன்பு கீழ்த்திசையில் சுமார் 75 அடி உயரமுள்ள இராஜகோபுரம் ஒன்று அணி செய்கின்றது. இதன் ஒரு மாடத்தில் தும்பிக்கையாழ்வார் (இவர் இத்திருக்கோயிலின் கூேடித்திர பாலகர் போலும்!) அமர்ந்துள்ளார். இவரை வணங்கிய பிறகு உள் நுழைகின்றோம். திருமலை நாயக்கர் மஹால் போன்ற மண்டபம் ஒன்றிற்கு வந்து சேர் கின்றோம். பெரியதான உருண்டு திரண்ட பெரிய துண்கள் தாங்கும் மண்டபம் இது. திருக்கோயில் மிகப் பெரியது; 690 அடி நீளமும் 288 அடி அகலமும் உள்ளதாக அமைக்கப்பெற்றுள்ளது. திருக்கோயில் விமானம் சீநிவாச விமானம்' என்ற பெயர் பெற்றுள்ளது. நறையூர் நம்பிக்கு சீநிவாசன் என்ற பெயரும் உள்ளது. சீநிவாசன் மகிழ்ந்து உறையும் தலத்தில் உள்ள விமானமும் அவன் பெயரில் வழங்குவது மிகவும் பொருத்த மாகத் தோன்றுகின்றது. பெரிய மண்டபத்தினின்று சற்று விலகியே விமான தரிசனம் செய்கின்றோம். படிக்கட்டுகள் ஏறிக் கல்யாண மண்டபத்தைக் கடந்துத் திரும்பவும் படிக்கட்டுகள் ஏறியே கருவறைக்கு வருகின்றோம். இக்கட்டுகளைத் தீர்த்து வைக்கும் நறையூர் நம்பி தன்னைத் தரிசிக்கப் பல படிக்கட்டுகள் ஏறி அடியார்கள் வரட்டுமே என்று எண்ணியே சற்று உயரமான