பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறையூர் நின்ற நம்பி 111 இடத்தையே தனக்கு இருப்பிடமாக அமைத்துக் கொண்டான் போலும். இந்த உயரமான இடம் "சுகந்த கிரி என்பது. சுகந்தம் - நறுமணம். இதுவே தமிழில் நறையூர் என்ற திருநாமம் பெற்றது. கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான் நறையூர் நம்பி. மேதாவி முனிவருக்கு அன்று திரு ஆழியும் திருச்சங்கமும் ஏந்திய கை களை முன்னே நீட்டிக்கொண்டு காட்சி தந்த அவசரத்திலேயே நிற்கின்றான் இரண்டு கைகளோடு; நான்கு கைகள் இருப்பதை யும் மறந்த நிலை. 'குன்றாடு கொழு முகில்போல், குவளைகள் போல், குரை கடல்போல், நின்றாடும் கனமயில்போல் 'நிற முடைய' பெருமான் அவன் என்றாலும் திருமேனி முழுவதும் தங்கக் கவசமும் அழகு மிக்க ஆபரணங்களும் அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றான். 'பொங்கு ஏறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்குஎறு கோலத் தடக்கைப் பெருமானை, கொங்குஎறு சோலைக் குடந்தைக் கிடந்தானை, நம்கோனை நாடி, நறையூரில் கண்டேனே (6.8:3) (பொங்கு ஏறு-மேன்மேலும் அதிசயித்து வரும்; நீள்-அளவற்ற; ஏறு-குடிகொண்ட, கொங்கு-மணம் மிக்க) என்ற திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழிப் பாசுரத்தை ஒதிச் சேவிக்கின்றோம். இப்பெருமானின் அருகில் வஞ்சுள வல்லித் தாயார் மரகதக்குன்றின் அருகில் ஒர் இளம் வஞ்சிக் கொடி நிற்பது போல் நிற்கின்றார். இந்த நம்பியை அடுத்து அன்று அவருடன் வந்த சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புரு டோத்தமன் ஆகிய நால் வரும் நிற்கின்றனர். மூலவருக்கு முன் னால் உற்சவர் நிற்கின்றார். பொதுவாக எல்லா இடங்களிலும் பெரியபிராட்டியார் பூமிப்பிராட்டியார் இவர்களுடன் நிற்பவன் இங்கே வஞ்சுளவல்லித் தாயாருடன் மாத்திரமே நிற்கின்றான். இந்தத் தாயாரும் 'இத்தலத்தில் எனக்கே முதல் இடம்’ என்பதை எடுத்துக் காட்டுவதுபோல் ஒரடி எட்டி எடுத்து முன்வந்து நிற் கின்றார். இத்திருக்கோவிலிலும் தாயார் சந்நிதி தனியாக இல்லை. 1. பெரியாழ் திரு. 4.8:9.