பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 + 2 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி இத்திருத்தலம் கருட சேவைக்குப் பேர் போனது. ஆகவே, அவனைச் சேவிப்பதற்கு புள்ளரையன் சந்நிதிக்கு வரு கின்றோம். இங்குள்ள கருடன் கருங்கல் உருவினன். 'கல் கருடன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன். நல்ல தோற்றம், நீள் சிறகு, நீள் முடி, அகன்ற மார்பு இவற்றுடன் கூடிய இவன் தனிக் கோயிலில் இருக்கின்றான். இவன் இருக்கும் கோயில் பத்தரை அடிச் சதுர அளவுதான். இவனை இக்கோயிலிருந்து நான்கே பேர் எளிதாக வெளியே எடுத்து வந்து விடுவர். அதன்பின் அவனுக்கு அதிகமான பலம் வந்து விடுகின்றது. பின்னர் வெளியில் எடுக்க வேண்டுமானால் எட்டு பேர்களாகவும் இன்னும் படிகள் இறங்கும் போது முப்பத்திரண்டு பேர்களாகவும் பூரீபாதம் தாங்குபவர்கள் எண்ணிக்கையில் வளர்ந்துகொண்டே போவர். நறையூர் நம்பி கல்கருடன் மீது ஆரோகணித்துவரும் நாச்சியார் கோயில் கருடசேவை கண்கொள்ளாக் காட்சியாகும். மார்கழி, பங்குனி இம்மாதங்களில் நடைபெறும் இந்தச் சேவைக்குப் பக்தர்கள் பேரளவில் வந்து கூடுவர். இவன் சிறந்த வரப்பிரசாதி என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உண்டு. நறையூர்நம்பியிடம் கேட்டுப் பெறமுடியாத வரங்களையும் இவன் நல்குவான். இவனுக்கு உகப்பான பலகாரம் 'அமுத கலசம்’ என்னும் மோதகம். இப்பிரசாதம் என்றைக்கும் கிடைக்கும். பக்தர்கள் அமுத கலசம் இவனுக்குச் சமர்ப்பித்து தம் கோரிக்கைகளை நிறைவேற்றுவித்துக் கொள்வர். அமுத கலசத்தை சுவைக்காது இத்திருத்தலத்தை விட்டுத் திரும்ப லாகாது. இத்திருத்தலத்தில் நரசிம்மன் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி ஆகிய இடங்கட் கெல்லாம் சென்று அவர்களைச் சேவிக்கின்றோம். மேலும், எண்ணற்ற செப்புச் சிலைகள் பெரிய அளவிலும், மிகச் சிறிய அளவிலும் இங்கு உள்ளன. சிறிய அளவிலுள்ளவை நல்ல கண்ணாடிப் பெட்டி யில் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ளன. நறையூர் நம்பியிடம் ஆராத காதலுடையவர் திருமங்கை மன்னன். இவர் பாடியுள்ள 109 பாசுரங்களும் பாடியவாய் தேனுறும் பான்மையன. இத்தலத்து எம்பெருமானே ஆழ்வாருக்கு முத்திரா தாரணம் செய்து வைத்ததாக வரலாறு. ஆழ்வார் பாடிய இரண்டு திருமடல்களும் நறையூர் நம்பியைப் பற்றியவையே.