பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறையூர் நின்ற நமபி 4 13 “ஊராது ஒழியேன் உலகுஅறிய ஒன்றுதளிர் சீரார் முலைத்தடங்கள் சேரளவும் - பாரெல்லாம் அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநறையூர் மன்றோங்க ஊர்வன் மடல்.’ என்ற சிறிய திருமடல் அநுசந்தித்தபிறகு முடிவில் அநுசந்திக்க வேண்டிய பாசுரத்தால் அறியலாம். இங்ங்னமே பெரிய திருமடலின், 'பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெயும் நன்னுதலீர் நம்பி நறையூர்-மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னும் மடலூர்வன் வந்து.' என்ற தனிப் பாடலும் பெரிய திருமடலும் நறையூர் நம்பி பற்றியதே என்பதை அரண் செய்கின்றது. நாயகி பாவனையி லுள்ள இரண்டு மடல்களையும் படிப்பவர்கள் 'இரண்டும் பிரேமத்தில் பெண் பேச்சாக 'ச் செல்வதை அறியலாம்; ஆழ்வாரின் முறுகிய காதல் தெளிவாகப் புலனாகிறது. திருமங்கை மன்னன் நறையூர் நம்பிக்கு ஒரு பெரிய மடல் இயற்றவும் அரங்கநாதனுக்கு ஒரு பெரிய மதில் கட்டவும் திட்டங்கள் வைத்திருந்தார். அரவணைப் பள்ளி கொண்டான் மங்கை மன்னனை அழைத்து 'மதிலை நறையூரில் கட்டு; மடலை அரங்கத்தில் பாடு” என்று வேண்டியதாக ஓர் ஐதிகம் உள்ளது. கிட்டத்தட்ட 250 பாசுரங்களை ஆழ்வார்களிடம் பெற்ற பெரிய பெருமாளுக்குத் தமிழின்மீது கொள்ளை ஆசை. ஆனால் ஆழ்வாரோ அதற்கு இசைந்திலர். மதிலை அரங்கத்தில் கட்டினார்; அப்பெரியகோயிலுக்கு மதிலே முக்கியம் எனக் கருதினார் போலும். நம்பியிடம் கொண்ட ஆராக் காதலினால் ஒரு மடலுக்கு இரண்டு மடலாகப் பாடி அவனை மனம் நெகிழச் செய்துள்ளார். அரங்கன் வேண்டுகோளையே தட்டிக் கழித்துவிட்டார். கோச்செங்கணான் கட்டிய மணிமாடக்கோயிலைப் பின்னர் வந்த மன்னர்கள் விரிவடையச் செய்துள்ளனர். 2. தனியன் (கம்பன் பாடியதென்பர்) 3. தனியன். சுப்பு - 9