பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி சடாவர்மன் சுந்தர பாண்டியன் நறையூர் நம்பிக்கு ஒரு தலத்தையே சாசனம் செய்துள்ளான். தஞ்சை இரகுநாத நாயக்கன் நாச்சியாருக்கு ஒரு மண்டபம் கட்டியுள்ளான். இத்தகைய பல தகவல்களை அறிந்த நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நம் நினைவுக்கு வருகின்றது. "செய்ய சடையோன் திசைமுகத்தோன் வானவகோன் ஐயம் அறுத்துஇன்னம் அறியாரே - துய்ய மருநறையூர் வண்துழாய் மாயோன் செவ்வாயோன் திருநறையூர் நின்றான் செயல்." (சடையோன் - சிவன்; திசை முகத்தோன் - நான்முகன்; வானவர் கோன் - இந்திரன், ஐயம் - சந்தேகம்; அறுத்து - ஒழித்து: துய்ய பரிசுத்தமாக; மரு - நறுமணம், நறை - தேன், வாசனை) என்பது பாசுரம். சிவனும் நான்முகனும் இந்திரனும் எம்பெருமான் செயலை உள்ளபடி யறிய மாட்டார்கள் என்ற கருத்தடங்கிய இப்பாசுரத்தைச் சேவிக்கின்றோம். மன நிறைவுடன் 'திருச்சேறை என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் புறப்படுகின்றோம். 4. நூற். திரு. அந். 20.