பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருச்சேறை எம்பெருமான் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரு கின்றான் அழகிய மணவாள நாய்க்கன்; இவன் விசய நகரப் பேரரசு வீழ்ந்த பிறகு தமிழகத்தில் ஆண்டு வந்த நாய்க்கர்களில் ஒருவன். இவன் இராஜமன்னார்குடி இராசகோபாலன் திருக்கோயிலைக் கட்டுவிக்க முனைந்திருக்கின்றான். தஞ்சை மாவட்டத்தில் கருங்கல் கிடைப்பது அரிதாதலால் வடக்கே எங்கிருந்தோ கல் கொண்டு வர ஏற்பாடு செய்கின்றான். கல், வண்டி வண்டியாகத் திருச்சேறை வழியாக மன்னார்குடிக்கு வந்து சேர்கின்றது. அழகிய மணவாள நாயக்கனின் அமைச்சன் நரசபூபாலன் என்பான்; இவனுக்குத் திருச்சேறை எம்பெரு மானிடம் ஈடுபாடு அதிகம். இவனுக்கு திருச்சேறை எம்பெரு மானுக்கு ஒரு திருக்கோயில் எழுப்பவேண்டும் என்பது பேரவா. ஆகவே, மன்னார்குடிக்குச் செல்லும் கல் வண்டிகளினின்றும் வண்டிக்கு ஒரு கல்லாகத் திருச்சேறையில் இறக்குவிக்கக் கட்டளையிடுகின்றான். தமிழகத்தில் புறங்கூறுபவர்கள் இன்று இருப்பதுபோல் அன்றும் இருந்தனர். பெரிய இடங்களில் புறங்கூறுபவர்கட்குச் செல்வாக்கும் அதிகம். பெரிய இடத்துப் பேர்வழிகளிடம் இத்தகைய புறங்கூறுபவர்களால் தெரிவிக்கப் பெறும் பல பொய்ச் செய்திகளையும் உண்மையானவை என்று நம்பும் வழக்கம் இருந்து வந்தமையால் இவர்கள் செல் வாக்குக்குக் குறைவு உண்டா? யாரோ ஒரு புறங்கூறுவோன் அமைச்சன் நரச பூபாலன் அரசுபணத்தை யெல்லாம் திருச் சேறை எம்பெருமானுக்கு கோயில் கட்டுவதில் செலவு செய் கின்றான் என்று ‘வத்தி வைத்து விட்டான். இதன் உண்மை யறிய விழைகின்றான் அழகிய மணவாள நாய்க்கன். இச்செய்தி யை அறிகின்றான் நரச பூபாலன். அரசன் சோதனைக்கு வரப்போகின்றான் என்ற செய்தி எட்டியவுடன் இரவோடு இரவாய் இராசகோபாலனையும் தாயாரையும் உருவாக்கி அவர்கட்கு ஒரு சிறு கோயில் கட்டிப் பிரதிட்டை செய்து தயாராய் வைத்திருக்கின்றான். மன்னன் வந்ததும் அந்தச் சிறு திருக்கோயிலைக் காட்டி மன்னனின்