பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சேறை எம்பெருமான் 117 அல்லது நீரில் கரைந்து விடுகின்றன. கடைசியாக வியாசர், மார்க்கண்டேயர், பராசரர் முதலிய முனிபுங்கரர்கள் தவம் புரிந்த இடத்திற்கு வந்து மண் எடுத்து கடம் செய்கின்றார். அந்தக் கடம் பின்னம் அடையாமல் நிலை பெறுகின்றது. திருமறைகளும் பிற சாத்திரங்களும் அதில் வைக்கப்பெறுகின்றன. பிரளய காலத்திலும் அவை அழியாமல் இருந்துள்ளன. இக்காரணம் பற்றிய இத்திருத்தலம் சார கூேத்திரம் என்றும், மண் எடுக்கப் பெற்ற இடம் சாரபுஷ்கரிணி என்றும் திருநாமங்கள் பெற்று விளங்கு கின்றன. திருக்குளத்தில் தீர்த்த மாடியதும் முதலில் நாம் தரிசிக்க வேண்டியவர், குளத்தின் மேல்கரையில் தென்மேற்கு மூலையில் அரசமரத்தடியில் எழுந்தருளி இருக்கும் காவிரித் தாயார். அவர் மாமதலைப் பிரானாக அவதரித்த ஒரு குழந்தையை அணைத்த வண்ணம் காட்சி தருகின்றார். அருகில் நான்முகனும் திருமாலும் நின்று கொண்டுள்ளனர். இவர்கள் இங்கு வந்த வரலாற்றைத் திருத்தலப் புராணத்தால் அறிய முற்படுகின்றோம். இதுதான் வரலாறு: ஒரு நாள் விந்தியமலை அடி வாரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு கன்னிகையரும் விளையாடிப் பொழுது போக்குகின்றனர். அவ்வமயம் விண்ணின் வழி ஏழும் விச்ரவசு என்ற கந்தருவன் இக்கன்னிகையரை வணங்குகின்றான். 'யாரைக் கண்டு வணங்கினான் அவன்?' என்ற வாக்குவாதம் அவர்களிடையே கிளம்புகின்றது. முடிவு காண்பதற்கு அவர்கள் நான்முகனை அணுகுகின்றனர். அவரோ எம்பெருமான் திரிவிக்கிரமனாக வளர்ந்து நின்றபோது அவர்தம் திருவடியைத் திருமஞ்சனம் செய்ததனால் தோன்றிய கங்கையே புனித மானவள் என்று சொல்லி விடுகின்றார். மற்ற அறுவரில் காவிரியைத் தவிர ஏனையோர் இந்த வாக்கு வாதத்தினின்றும் மரியாதையாக ஒதுங்கிக் கொள்ளுகின்றனர். காவிரி நான் முகனின் கருத்திற்கு ஒருப்படாமல் தான் கங்கையை விடப் புனிதமானவளாகக் கருதப்பெறல் வேண்டும் என்று பரந் தாமனை நோக்கித் தவம் புரிகின்றாள். அவள் சாரபுஷ்கரிணியின் கரையிலுள்ள அரசமரத்தினடியில் இருந்து கொண்டு தவம் புரிகின்றாள். பரந்தாமன் அவள் தவத்திற்கு இரங்கி தைத் திங்களில் பூச நட்சத்திரமும் குருவாரமும் பெளர்ணமியும் கூடிய நன்னாளில் ஒரு குழவியாய் அவதரித்துக் காவிரியின் மடியில்