பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சேறை எம்பெருமான் 119 கண்சோர வெம்.குருதி வந்து இழிய வெம்தழல்போல் கூந்த லாளை மண்சோர முலைஉண்ட மாமதலாய்! வானவர்தம் கோவே! என்று விண்சேரும் இளம்திங்கள் அகடுஉறிஞ்சு மணிமாடம் மல்கு செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார் காண்மின்-என் தலைமே லாரே' (சோர சுழலமிட்டுத் தளர: குருதி - இரத்தம்; இழிய - பெருக: தழல் நெருப்பு: மாமதலாய் - இளம் பிள்ளையே; அகடு - கீழ் வயிறு, உறிஞ்சு அளாவுகின்ற; மல்கு - நிறைந்திருக்கப்பெற்ற தாள் - திருவடிகள்; தலை மேலார்- தலைமேல் வீற்றிருப்பர்) என்பது பாசுரம். 'பூதனையை முடித்த சிறு குழந்தாய்! வானவர்தம் கோவே! என்று சொல்லி அவனுடைய பரத்துவ செளலப்பியங்களைப் போற்றி உருகுகின்ற பாகவதர்கள் எவரோ அவர்களே என் தலைமேல் வீற்றிருக்க உரியார்' என்கின்றார் ஆழ்வார். இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானப் பிரவேசத்தில், 'பிள்ளையழகிய மண வாளரையர் கரையே போகா நிற்க, 'உள்ளே மாமதலைப் பிரானைத் திருவடி தொழுது போனாலோ?' என்ன : 'ஆர்தான் திருமங்கையாழ்வாருடைய பசைந்த வளையத்திலே (வளையம்திருமுடியிலணியும் மாலை) கால் வைக்க வல்லார்? என்றருளிச் செய்தார்.’’ என்ற வியாக்கியானப் பகுதி இங்கு அநுசந்திக்கத் தக்கவை. இதனை விளக்குவோம்: பிள்ளையழகிய மண வாளரையர் என்பவர் ஏதோ ஒரு காரியமாய்த் திருச்சேறை வழியாய் ஓரிடத்திற்கு எழுந்தருள நேர்ந்தது. அவர் திருச்சேறைப் பதியிற் புகாமல் வயல் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு அவரைக் கண்ட ஒர் அன்பர் 'வயல் வழியே போவானேன்? திருப்பதியினுள்ளே புகுந்து சாரநாதப் பெருமானைச் சேவித்துப் போகலாகாதோ?’ என்று வினவினார். அதற்கு அரையர் சமத்காரமாக ஒர் உத்தரமுரைத்தார்: இத்திருப்பதிபற்றிய பாசுர முரைத்த திருமங்கையாழ்வார் தண் சேறை யெம் பெருமான் தாள் தொழுவார் காண்மின்-என் தலைமேலாரே என்றார்; இப்பாசுரத்தின்படி, "திருச்சேறை எம்பெருமானைச் சேவிப் 2. மேலது 7.4.1.