பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி பவர்கள் ஆழ்வாருடைய திருமுடியிலேற வேண்டிய தாகும்; அது நமக்கும் பெருத்த அபசாரம் ஆகும்; அதற்கு அஞ்சியே உள்ளுப் புகாமல் கரையோரமே போய் விடுகிறேன்’ என்றாராம். இது ஒரு வகையான சுவைநயப் பேச்சு. திருச்சேறை எம்பெரு மானைச் சேவிப்பவர்கள் பக்கலில் ஆழ்வார் வசித்திருக்கும் பிரபத்தியை விளங்கக் காட்டினபடியாகும். இத்தலத்து எம்பெருமான்மீது திருவாய் மலர்ந்தருளிய பாசுரங்களில் ஆழ்வாரின் பக்தி வெள்ளம்-பாகவதர்களின் மீதுள்ள ஆதரம்-கரை புரண்டோடுகின்றது. பாசுரங்களில் எம்பெருமான் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், நரசிம்மா வதாரங்களில் நிகழ்த்திய வீரச்செயல்கள் குறிப்பிடப் பெறு கின்றன. திருச்சேறை எம்பெருமான்மீது ஆழ்வார் கொண்டுள்ள பக்தியின் ஊற்றம், பாகவதர்களின்மீது அவர் கொண்டுள்ள பேரன்பு ஆகியவை வெளியிடப் பெறுகின்றன. இவற்றைச் சிந்திக்கின்றோம். 'இத்தலத்து எம்பெருமான் பெரிய பிராட்டியாரைத் திருமார்பில் வைத்துக் கொண்டிருப்பவன்; கன்றினால் விளவெறிந்தவன்; இவனே திருச்சேறையில் நித்தியவாசம் செய்பவன். இவன் திருவடிகளைச் சேவிப்பவர்கள் ஒரு நொடிப் பொழுதும் என் நெஞ்சகத்தைவிட்டு நீங்கார் இதிலுள்ள 'எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை, பாகவதர்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் நிறைந்திருப்பார்களாதலால் சிந்தைக்கினிய பெருமானுக்கு அங்கு இடமில்லை என்று நயம்படப் பொரு ளுரைப்பார் (2); சூர்ப்பனகையின் மூக்கும் காதும் வெம்முரண் முலைக் கண்களும் போக்கிய வீரனே! என்று சொல்லி எம்பெருமானுடைய திறலில் ஈடுபட்டு அவனது திருக்கழலிணை களையே துதித்து மலர்களையும் தீர்த்தத்தையும் சமர்ப்பிக்கும் அடியார்கள் நித்திய சூரிகளைக் காட்டிலும் சிறந்தவர்களாவர் (3); 'தேர்வீரனான இராவணனுடைய இலங்கை மாநகரைப் பொடிபடுத்தின பெருவீரனே' என்று சொல்லித் திருச்சேறை எம்பெருமானுடைய பல பல திருநாமங்களை வாயாரப் பாடும் பெருமையுடையார் எவரோ அவரை ஒரு நாளும் பிரியேன்” (4): பிரகலாதாழ்வானைக் காத்தருள வேண்டி நரசிங்க மூர்த்தி யாய்த் துணில் தோன்றி இரணியனின் மிடுக்கைப் பொடித்த எம்பெருமானுக்கே அடிமையாயிருப்பேனேயன்றி