பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சேறை எம்பெருமான் 121 சமணர் பெளத்தர் முதலானவர்களுடைய திரளில் சேரக் கடவனல்லேன்'(5). 'ஆதிவராக மூர்த்தியாய்த் தோன்றி அண்டபித்தியில் சேர்ந்திருந்த பூமியை அதினின்றும் விடுவித்துக் கொணர்ந்த பண்பாளா!' என்று இடையறாமல் சொல்லிக் கொண்டு நின் திருவடிக்கே அடிமையானேன்; நின் திருவடிகளே எனக்குத் தஞ்சம்; நின்னையன்றி வேறொரு புகலையுடையேனல்லேன்; இது சத்தியம்; திருச்சேறை எம்பெருமானின் அடியார்களைச் சேவித்த மாத்திரத்தில் என்னுடைய கண்களும் நெஞ்சும் களிக்கின்றபடியைக் காணுங்கள் (6); 'திருவனந்தாழ்வான்மீது திருக்கண் வளர்ந்தருளும் பெருமானே! அஞ்சனமலை போன்ற குளிர்ந்த வடிவையுடைய மாயனே! என்று சொல்லிக் கொண்டு திருச்சேறை எம்பெருமானின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் என்னுடைய எல்லா உணர்வுகளையும் தன் வசமாக்கிக் கொண்ட அப்பெருமானுக்கு ஆட்பட்டவர் எவரோ அவர்கள் திறத்தில் என் அன்பு பெருகுகின்றது (7): 'விண்ணவரும் மண்ணவரும் ஈண்டித் தொழும்படியான திருவடிகளையுடைய திருச்சேறை எம்பெருமானைக் கண்ணாரக் கண்டும் கையாரத்தொழுதும் பரவசப்படுகின்ற வைணவர்களை நெஞ்சார நினைத்த மாத்திரத்தில் எமபயத்திற்கும் உட்படேன்’ (8); 'பாகவதர்களைச் சேவிக்கப் பெற்றதனால் தமக்குண்டான எல்லை கடந்த மகிழ்ச்சிப் பெருக்கைப் பேசி, வஞ்ச நெஞ்சனான எனக்கு இப்படிப்பட்ட மகிழ்ச்சியை அநுபவிக்கும்படியான பேறு எங்ங்னம் வாய்த்ததோ? தெரியவில்லையே’ என்று வியப்பெய்துகின்றார் ஆழ்வார் (9). இங்ங்னம் சிந்தித்த நிலையில் திருக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். திருக்குளத்தின் மேல்கரையில் சுமார் 120 அடி உயரமுள்ள இராசகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இந்தக் கோபுரத்தைக் கடந்து முதல் சுற்றுக்கு வருகின்றோம். அங்கு இடை நிலைக் கோபுரம் ஒன்றுள்ளது. இதனை அடுத்து இருப்பது திருக்கல்யாண மண்டபம், மண்டபத்தில் வடக்குப் பக்கத்தில் தான் மேலே குறிப்பிட்ட இராசகோபாலன் சந்நிதி உள்ளது. இவனை முந்திக்கொண்டு திருவேங்கடமுடையான் எழுந்தருளி யுள்ளான். இவர்களை அடுத்து சீதாப்பிராட்டி, இலட்சுமணன் இவர்களுடன் இராமனும், சேனை முதலியாரும் ஆழ்வாராதி களும் எழுந்தருளியுள்ளனர். எல்லோருமே நல்ல