பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவரை ‘வானமாமலை என்றே திருநாமம் சூட்டுவார் நம்மாழ் வார் (திருவாய். 5.7.6). மணவாள மாமுனிகள் காலத்திலிருந்தே இத்திருத்தலத்து வானமாமலை மடம் சீரும் சிறப்பும் பெற்று விளங்குகின்றது. இத்திருமடத்தை நிறுவிய முதல் சீயர் மணவாள மாமுனிகளின் திருவடி சம்பந்தம் பெற்றவர். பண்டைய பெருமைகள் பழுதுபடாது காத்துப் புர்ப்பவர் 28-வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ச சடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமி அவர்கள். 79-அகவை நிரம்பிய சுவாமி அவர்கள் சீவில்லி புத்தூரை அடுத்த வடகரை அக்கிரகாரத்தில் அழகிய சிங்கர் - செங்கமல நாச்சி யாரின் திருக்குமாரராகத் தோன்றியவர்; கோபாலையங்கார் என்ற திருநாமம் சூட்டப்பெற்றவர். இளமை முதலே சமயப் பற்று மிக்கவர். வானமாமலை மடத்தில் ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் சின்ன கலியன் சுவாமிகளிடம் திருவிலச்சினையும் சம் பிரதாய அர்த்த விசேடங்களையும் பெற்றவர். காஞ்சி, திரு வரங்கம் என்ற திவ்விய தேசங்களில் பயின்றவர். அவ்விடங் களில் கைங்கரியமும் புரிந்தவர். காரப்பங்காடு சிங்கப்பெருமாள் பக்கம் ஐந்து ஆண்டுகள் உபயவேதாந்த கிரந்த காலட்சேபம் பயின்றவர். காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகளின் திருக்கண் நோக்கிற்கு இலக்காகி இருப்பவர். மணவாள மாமுனிகளின் 600-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இவர் சீவில்லிப்புத்துரில் உபந்யாசம் நிகழ்த்தி வருகையில் வானமாமலை 27-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் இவரைக் கடைக்கண் நோக்கி 27-10-70 அன்று இளவரசாக அபிஷேகம் செய்து அருள் புரிந்தார். 1980-ல் பெரிய சுவாமி திருநாடலங்கரித்ததும் இளவரசு சுவாமி பெரிய சுவாமியாக திருவபிஷேகம் செய்யப் பெற்று வைணவ சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்து வருகின்றார். இந்த மடத்தின்பால் தனிப்பற்றும், இத்திருத்தலத்தில் எழுந்தரு ளியிருக்கும் தோத்தாத்திரி நாதன்பால் தனி ஈடுபாடும் எனக்கு உண்டு. இவற்றின் நினைவாக இத்திரு நூலை இந்த ஜீயர் சுவாமி களின் திருவடிகளில் படைத்து மகிழ்கின்றேன். சுவாமிகளின் திருக்கண் நோக்கும், எம்பெருமானின் திருவருளும் என்னை உய்விக்கும் என்று நம்புகின்றேன். ஜீயர் சுவாமிகளின் ஆசியால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஆசாரியர்களின் உரை களிலும் எனக்குத் தெளிவும் பக்தியும் மேலும் மேலும் பெருகி என்னை உய்விக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம்மாழ்வாரின்,