பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி செப்புத் திருமேனியைக் கொண்டு திகழ்கின்றனர். இவர்களுடன் இராமனும் சேனை முதலியாரும் தம் பேரெழிலால் நம்மைக் கவர்கின்றனர். அடுத்து உள் கட்டில் நுழைந்தால் நரசிம்மன், மணவாள மாமுனிகள் இவர்களைச் சேவிக்கலாம். இவர்கள் எல்லோரையும் சேவித்த பிறகு கருவறையை அடைகின்றோம். இங்குச் சிலை வடிவில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பவர் சாரநாதப் பெருமாள். இவருக்குப் வலப்பக்கத்தில் மார்க்கண்டேய முனிவரும் இடப்பக்கத்தில் காவிரித் தாயாரும் சிலை வடிவில் காட்சி தருகின்றனர். இவர்கட்கு முன்னால் இருப்பவர் உற்சவர் சாரநாதர். இவர் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், நீளா தேவியார் இவர்களுடன் சேர்ந்தே எழுந்தருளியுள்ளார். காவிரித் தாயாரின் மடியில் மாமதலை வடிவிலும் காட்சிதருகின்றார். இன்னும் சந்தான கிருஷ்ணன், செல்வர் இவர்களும் அங்கே இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் சேவித்த பிறகு வெளியே வந்து வலப்புறமாகச் சுற்றி வந்து சாரநாயகித் தாயாரைச் சேவித்து அவருடைய திருவருளைப் பெறுகின்றோம். இங்கு இவருக்குத் தனி சந்நிதி உண்டு. இவர்களை சேவித்த பிறகு இடை நிலைக் கோபுரத்தருகில் வந்து திருச்சேறை எம்பெருமான்மீதுள்ள ஆழ்வார் பாசுரங்களை மிடற்றொலிகொண்டு ஒதுகின்றோம். மிடுக்கான நடையி லமைந்த பாசுரங்கள் நம்மைப் பக்தியின் கொடுமுடிக்கு இட்டுச் செல்கின்றன. பூமாண்சேர் கருஞ்குழலார் போல்நடந்து வயல்நின்ற பெடையோடு அன்னம் தேமாவின் இன்நிழலில் கண்துயிலும் தண்சேறை அம்மான் தன்னை வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர் தூமாண்சேர் பொன்அடிமேல் சூட்டுமின்நும் துணைக்கையால் தொழுது நின்றே." (மாண் - அழகு; பெடை - பெண் அன்னம்: தேமா - மாமரம், வாமான்ஓடிவரும் குதிரை, மான் - மாட்சிமை) 3. மேலது 7.4; 10.