பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சேறை எம்பெருமான் 423 'திருச்சேறை எம்பெருமானைச் சேவிக்கச் செல்பவர்கள் வேறு மலர்களைத் தேட வேண்டா; இத் திருமொழிப் பாசுரங்களை அநுசந்நிதித்தாலே பூவிட்டதற்கும் மேலாக எம்பெருமானின் திருவுள்ளம் உசுக்கும்’ என்று ஆழ்வாரே சொல்லியுள்ளதை எண்ணி வியப்பெய்துகின்றோம். இந் நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நம் நினைவிற்கு வருகின்றது. சென்றுசென்று செல்வம் செருக்குவார் வாயில்தொறும் நின்று நின்று தூங்கும் மடநெஞ்சே - இன்தமிழைக் கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறாகச் சேறைக்கு நாயகன்பேர் செப்பு." (செருக்குவார் - இறுமாப்புக் கொண்டவர்; வாயில் - வாசல்; தூங்கும் - சோர்வடையும்; கூறை அடை, கூறாது - பாடாமல்; பேறு - வீடுபேறு; செப்பு - பாடு) என்பது பாசுரம். செல்வச் செருக்குடையார் வாயிலருகில் சென்றுச் சோற்றுக்கும் கூறைக்கும் பாடாமல் சேறை நாயகன் பேர் பாடி பரமபதம் அடைந்து பேராநந்தத்தை அடையுமாறு தம் நெஞ்சிற்கு உபதேசிக்கின்றார் அய்யங்கார். இந்த அநுபவத்துடன் நம் இருப்பிடம் திரும்பச் சித்தமாகின்றோம். இத்தலத்து எம்பெருமான், சாரநாதன்; தாயார், சாரநாயகி, விமானம், சாரவிமானம்; தீர்த்தம், சாரதீர்த்தம்; நிலம், சாரசேஷத்திரம்: ஐந்து சாரமுள்ள பொருள்கள் ஒரு சேர அமைந்திருந்தலால் இத்தலம் 'திருச்சேறை என்ற திருநாமம் பெற்றது. வடமொழியில் பஞ்ச ஸார கூேடித்திரம்' என்று வழங்குகிறது. இங்ங்னம் சாரமுள்ள பொருள்களையுடைய இத்திருத்தலத்தில் காவிரி தவம் செய்து கங்கையை விடச் சிறப்புப் பெற்றனள் என்பர். 4. நூற். திருப். அந். 12.