பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளியங்குடிக் கோலவில் இராமன் 125 ஒரு மரத்தைப் பற்றியிருந்தால், ஒருவன் இருவினைப் பயன்களை நுகரா நிற்பன்; ஒருவன் நுகர்வித்து விளங்கா நிற்பன்' என்ற கருத்து உள்ளது. இறைவன் ஏவுகின்றவன்; நாம் ஏவப்படும் பொருள் என்ற உண்மையை ஆசாரியன் உணர்த்த நாம் உணர்கின்றோம். இதனை இக்கால அரசியல் கொண்டு விளக்குவோம். 'மக்கள் வாக்கு மகேசுவரன் வாக்கு என்பதை அரசியல் தலைவர்கள் நன்கு உணர்தல் வேண்டும். அப்படி உணராமல் 'வாக்குகள் எல்லாம் நம் செல்வாக்கில்தான் நம் சார்பில் வந்து குவிந்தன என்ற அகந்தையினால் மக்கள் வாக்கினால் பெற்ற பலத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினால் இறைவன் வாளா இரான். அடுத்த தேர்தலில் இது தலைகீழ்ப் பாடமாகப் போய் விடும். அங்ங்னமின்றி இந்தச் சந்தர்ப்பம் நமக்கு இறைவனால் வழங்கப்பெற்றது என்று கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் தொண்டாற்றத் தொடங்கினால் நாடும் செழிப்புறும். ஆட்சி புரியும் தலைவனும் புகழுடன் திகழ்வான். சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டை ஆண்ட தலைவர்கள் இந்த அநுபவத்தைப் பெற்றிருந்தும், சிந்தியாமல் அகந்தையுடன் இருந்தமையால் வீழ்ச்சி அடைந்தனர்; சொல்லொனா அவமானத்தையும் அடைந்தனர். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் எழுந்த வண்ணம் திருவெள்ளியங்குடிக்குப் போகச் சித்தமாகின்றோம். இந்த திவ்விய தேசம் திருவிடை மருதூர் இருப்பூர்தி நிலையத்தி லிருந்து வடதிசையில் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலும், அல்லது மாயூரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கீழ்த்திசையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கும்பகோணத்தி லிருந்து அணைக்கட்டுக்குப் போகும் பேருந்து செல்லும் வழியில் செங்கனூர் என்ற ஊரில் இறங்கி தென் திசையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவெள்ளியங்குடிக்குச் செல்ல வேண்டும்; மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். சில சமயம் மாட்டு வண்டியும் கிடைப்பதில்லை. நடந்து போகத் தயாராக இருக்க வேண்டும். வண்டி கிடைக்காததால் நாம் நடந்தே செல்லுகின்றோம். கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பெரியவாச்சான் பிள்ளை பிறந்த சேங்காநல்லூர் உள்ளது. சுக்கிரன் தவம் புரிந்து பேறு பெற்ற தலமாதல்பற்றி இது வெள்ளியங்குடி என்ற திருநாமம்