பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி பெற்றதாகச் சொல்வார். ஒன்பது கோள்களும் பேறு பெற்ற தலங்கள் நம் நினைவிற்கு வருகின்றன. சூரியன் பேறு பெற்ற தலம் சூரியனார் கோயில்; சந்திரன் பேறு பெற்ற தலம் இந்தளுர்; செவ்வாய் பேறு பெற்ற தலம் வைத்தீசுவரன் கோயில்; புதன் பேறு பெற்ற தலம் திருவெண்காடு; குரு பேறு பெற்ற தலம் ஆலங்குடி, சுக்கிரன் பேறு பெற்ற தலம் திருவெள்ளியங்குடி, சனி பேறு பெற்ற தலம் திருநள்ளாறு; இராகு கேது பேறு பெற்ற தலம் திருவாஞ்சியம் (பூரீ வாஞ்சியம்). இவற்றைச் சிந்தித்த வண்ணம் திருவெள்ளியங்குடியை நோக்கி நடக்கின்றோம். தஞ்சை மாவட்டம் மருத நிலவளத்திற்குப் பேர் போனது. இதனைத் திருமங்கையாழ்வார் தம் திருப்பாசுரங்களில் குறிப் பிட்டுள்ளதைச் சிந்தித்த வண்ணம் நடக்கின்றோம். அக்காட்சிகள் இன்றும் நம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம். திருக்கோயிலின் புறச் சூழ்நிலை எவ்வாறுள்ளது? “காய்ந்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும்.ஆம் பொழில்களின் நடுவே வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி அதுவே' (நீள்-ஓங்கியிருக்கும்; கமுகு - பாக்கு மரம், கதலி - வாழை மரம், தெங்குதென்னை மரங்கள், பொழில்கள் - சோலைகள்: மண்ணி - மண்ணியாறு) என்கின்றார் ஆழ்வார். 'காய்கள் நிறைந்து ஓங்கிக் கிடக்கின்ற பாக்கு மரங்கள், வாழை மரங்கள், தென்னை மரங்கள் இவை மலிந்திருக்கும் சோலைகளில் சென்று பாயும் மண்ணியாற்றின் தென்கரையிலுள்ளது திருவெள்ளியங்குடி (1); நிறைந்து பூத்துக் குலுங்கும் சுரபுன்னை மரங்கள் மொக்குவிட்டுக் கிடக்கும் புன்னை மரங்கள் இவற்றின் பொந்துகளிடையே வண்டுகள் நெருங்கிக் கொண்டு இராமாயண காலத்தில் மதுவனத்தில் புகுந்த வாணர முதலிகளைப்போல் பெரிய ஆரவாரத்துடன் மதுபானம் பண்ணி இசைபாடப் பெற்ற சோலைகள் சூழ்ந்த இடம் இது (2); இதன் அருகில் ஒடும் மண்ணியாற்றில் துறைதோறும் அலைகள் நவமணிகளைக் கொண்டு வந்து குவிக்கினறன.(4); இத்திருத் தலத்தைச் சார்ந்த வயல்கள் எப்பொழுதும் ஏர் கொண்டு உழப்படுகின்றன. இதனால் வெருவிய வாளை மீன்கள் 1. பெரி. திரு. 4-10:1.