பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளியங்குடிக் கோலவில் இராமன் 127 அச்சமின்றி வாழ்வான் வேண்டிப் பொய்கைகளில் சென்று சேர்கின்றன. சம்சார வாழ்க்கை ஆபத்துகளுக்கு இடமென்று துணிந்து அதனை விட்டு நித்தியானந்தமான பரமபதத்தில் வாழ்வதைக் கருதுகின்ற முமுட்சுகளின் நிலையை இங்ங்னம் மீனைக் கொண்டு எடுத்துக் காட்டுவதாகக் கொள்வர் பெரியோர் (5); ஊற்று நீர் உள்ள நிலங்களில் முளைத்திருக்கின்ற வாழை மரங்களினின்றும் உதிர்ந்த நன்கு பழுத்த கனிகளைக் கயல் மீன்கள் மேல் விழுந்து புசித்து சேற்று நிலங்களில் துள்ளி விளையாடுகின்றன (6); மேலும், ‘அள்ளியம் பொழில்வாய் இருந்துவாழ் குயில்கள் அரிஅரி என்றவை அழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி அதுவே" (அள்ளி - தாதுக்கள்; எதுகை நோக்கி அல்லி அள்ளி என்றாயிற்று; வெள்ளியார் . சுக்கிரன்; விரைந்து-விரைவில்) என்று இவ்வூரைக்காட்டுவர். தாதுக்கள் மணம் பரப்பும் அழகிய சோலைகளில் இருந்து மகிழும் குயில்கள் 'ஹரி, ஹரி என்று கூவும் இடம் இது (7); மணம் வீசப்பெற்ற தாமரைமலர்கள் கரும்புக் காட்டிலும் செந்நெல் கழனிகளிலும் மலர்ந்து காணப் பெறுகின்றன; கரும்புகளும் செந்நெற் பயிர்களும் அசைந்து கொண்டு திகழ்கின்றன. அழகிய அன்னப் பறவைகள் பேடை யுடன் கூடி தாமரை மலர்களின்மீது காட்சி அளிக்கின்றன (9); இதற்கு ஓர் உட்கருத்து உரைப்பர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார். இருபக்கத்திலும் கரும்பும் செந் நெல்லும் அசைவது சாமரம் வீசுவதொக்கும்; தாமரை மலரின் மீது அன்னமும் பேடையும் கூடி வாழ்வது பெருமானும் பிராட்டி யும் கூடிவாழ்வதொக்கும்." திருவெள்ளியங்குடி சூழ்நிலையைக் கண்டுகளிக்கும் நாம் ஆழ்வார்காலத்து ஊரையும் மானசீகமாகக் கண்டுகளிக்கின் றோம். இந்த ஊரின் மாடமாளிகைத் தூண்களில் அழுத்தப் பெற்றுள்ள தவமணிகளின் ஒளி இடைவிடாது திகழ்வதால் இது பகல், இது இரவு' என்று அறியக்கூடவில்லை. இது பொய்யுரை என்று சிலர் ஐயுறுவர். எம்பெருமான் கோயில் 2. பெரி. திரு. 4. 10 : 7 3. மேலது 4.10:9 (திவ்வியார்த்த தீபிகை). 1 1