பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி கொண்டுள்ள இத்தலம் இங்ங்னம் அதிசயம் வாய்ந்ததாக அமையவேண்டும் என்னும் ஆவலால் ஆழ்வார் இங்ங்னம் அருளிச் செய்கின்றார் என்றுகொள்ளல் வேண்டும் (8); அன்பின் மிகுதியால் இங்ங்னம் கூறல்தகும். இத்திருத்தலத்து வாழும் அழகிய மகளிர் செய்யும் நடனப் பயிற்சியினால் எழும் இன்னோசை நாற்றிசைகளிலும் உம்பர் உலகங்களிலும் பரவி அதிர்கின்றது (3). ஆழ்வாரின் ஆதராசியத்தால் விளைந்த கற்பனை இது. பரத்துவ நிலை, வியூக நிலை, விபவநிலைகளிலுள்ள எம்பெருமானே அர்ச்சை நிலையில் திருவெள்ளியங்குடியில் எழுந்தருளியுள்ளார் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம். இந்த மூன்று நிலை எம்பெருமான்களும் பாசுரங்களில் கலந்தே காணப்பெறுகின்றன்ர். பாசுரங்களில் ஆழங்கால்படும் நிலையில் எம்பெருமான்களையும் சிந்தித்து அநுபவிக்கின்றோம். திருவெள்ளியங்குடியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? ஆய்ச்சியர் முறையிடும் படியாக வெண்ணெய் அமுது செய்த கள்வன்; பிரளய காலத்தில் ஆலந்தளிரில் கண் வளர்ந்தவன்; யூதனையின் மூலைப்பாலை அமுது செய்யும் பாவனையில் அவள் உயிர் குடித்தவன்; இரட்டை மருதமரங்களை முறித்து ஒழித்து நளகூபர மணிக் கிரீவர்களின் சாபம் போக்கியவன்; மாவலியிடம் மூன்றடி மண் பெற்று பெருநிலம் அளந்து கவர்ந்து கொண்டவன் (1); கண்ணனாக வந்து ஆநிரைகளை மேய்த்தவன்; கடலில் சேது.கட்டி அரக்கர்களின் தலைகளை அறுத்துத் தள்ளினவன்; கார் கால மேகம் போன்ற வடிவுடையவன் (2); கடுவிட முடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னழித்து, அவன்றன் படம் இறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல் நடப்பயின்றவன்' (3); 'கறவை முன்காத்துக் கஞ்சனைக் காய்ந்த காளமேகத் திருவுருவன், பறவை முன் உயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமன்' (4); 'பாரினை உண்டு பாரினை உமிழ்ந்தவன்; பார்த்தனுக்குத் தேர் ஊர்ந்து பகைவர்களின் தேர்களைப் பங்கப்படுத்திய பெருமான்' (5); பூளைப் பூப்போல் உருமாய்ந்து போம்படியாக இலங்கையின் அரக்கர் சேனைகள் ஒழியும்படியாகக் கொடிய கணைகளைச் செலுத்திய கோலவில்லி இராமன் (6), வாமன மாணியாய் மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்ற திசைகளெல்லாம் விம்முற வளர்ந்த பெருமான் (7); நான்முகன் முதலிய தேவர்கள் கூட்டம்