பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளியங்குடிக் கோலவில் இராமன் 129 கூட்டமாகச் சேர்ந்து எம்பெருமானுடைய பரத்துவ குணங்களையும் செளலப்பியம், செளசில்யம், வாத்சல்யம் என்ற குணங்களையும் சொல்லித் தொழுதேத்த அவர்கட்குத் திருவருள் சுரந்து கொண்டு திருப்பாற்கடலில் அரவணைப் பள்ளியின்கண் துயில் கொண்டிருக்கும் எம்பெருமான் (9); மேலும், 'முடியுடைய அமர்க் கிடர்செயும் அசுரர் தம்பெரு மானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வம்முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்.” (அமரர் - தேவர்; இடர் - துன்பம் , அரி - சிங்கம்; அசுரர்தம் பெருமான் - இரணியன்) என்று இத் திருக்கோவிலைப்பற்றிப் பேசுவர் ஆழ்வார். தேவர்கட்குத் துன்பம்இழைத்த இரணியனை நரசிங்கமாக வந்து தம் மடியில் வைத்து அவன் மார்பைக் கிழித்து உயிர் குடித்த பெருமான். பலசுருதிப் பாசுரத்தில் வராக அவதாரம் எடுத்து பூமிப் பிராட்டியாரைத் தம் கோட்டிடை வைத்து அருளியவனும், தெளித்த அலைகள் தம் திருவடிகளின்மீது மோதும்படியாகத் திருப்பாற் கடலில் கண் வளர்ந்தருள்பவனுமான எம்பெருமானே திருவெள்ளியங்குடியில் எழுந்தருளியிருப்பவன் என்கின்றார். மேற்குறிப்பிட்ட எம்பெருமான்களே அர்ச்சை உருவத்தில் திருவெள்ளியங்குடியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ளனர் என்பது ஆழ்வார் உணர்த்தும் கருத்து. எந்த நிலையில் எழுந்தருளியிருந்தாலும் அவனே பரமபதநாதன் என்ற வைணவ சமயக் கருத்தினை உணர்த்தும் நிலையில் பாசுரங்கள் அமைந் துள்ளன. இங்ங்னம் சிந்தித்துக் கொண்டே திருக்கோயிலை அடைகின்றோம். இத்திருத்தலத்து எம்பெருமானின் திருநாமம் கோலவில்லி இராமன் என்பது. இது திருமங்கையாழ்வார் சூட்டிய திருநாமம். இவருக்குச் சிருங்கார சுந்தரன் என்ற திருநாமமும் உண்டு. தாயார் மரகதவல்லி. இவர்கள் இருவரையும் திருமொழிப் பாசுரங்களை மிடற்றொலியால் ஓதி உளங் கரைந்து வழிபடுகின்றோம். எம்பெருமான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு புயங்க சயனத்தில் (கைகளின் மீது தலையை வைத்துக் கொண்டு) சேவை சாதிக்கின்றான். 4. மேலது 4.10.8. சுப்பு - 10