பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்வனோ ஆழியங் கைஎம்பி ரான்புகழ் பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும் ஏர்விலா என்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே?4 என்ற திருவாய்மொழியை நினைவுகூர்கின்றேன். ஆழ்வார் கருதுவதுபோல் இந்நூலை யான் எழுதி வெளியிட்டதற்கு மூல காரணம் என்னுளே இருக்கும் எம்பெருமானே ஆவன். என்னைக் கருவியாகக் கொண்டு எம்பெருமான் தன் புகழை நிலை நிறுத்திக்கொண்டான் என்பது என் நம்பிக்கை. நம்முடைய தற்புகழ்ச்சி விருப்பத்தைவிட எம்பெருமானின் தற்புகழ்ச்சி அவா எல்லாவகையாலும் விஞ்சி நிற்பது. சகஸ்ர நாமப் பிரியன் அல்லவா? இங்ஙனம் எனக்கு எல்லா நலன்களையும் ஈந்து என்னை இயக்கி நன்னெறிப்படுத்தி வரும் திருவேங்கட முடையானை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி இறைஞ்சி வணங்குகின்றேன். வந்தாய்; என்மனம் புகுந்தாய்; மன்னிநின்றாய் நந்தாதகொழுஞ் சுடரே, எங்கள் நம்பீ சிந்தா மணியே! திருவேங் கடம்மேய எந்தாய்! இனியான் உன்னை என்றும்விடேன்." - திருமங்கையாழ்வார் 4. திருவாய் 7.9 : 8 5. பெரி. திரு. 1.10:9