பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புள்ளம் பூதங்குடிப் புனிதன் எம்பெருமான் வாமன மாணியாக வந்து மாபலியிடம் * * 1 மூவடிமண் பெற்று 'ஓங்கி உலகளந்த உத்தமனாக வளர்ந்தபோது அவனுடைய திருவடி நான்முகனின் சத்திய லோகம் வரைசென்று அளந்தது. அப்பொழுது நான்முகன் அந்த திருவடிக்குத் திருமஞ்சனம் (நீராடல்) செய்து பெருமையுற்றான். அந்த நீரே கங்கையாகப் பெருகி வழிந்தது. அதனைச் சிவபெருமான் தன் திருச்சடா முடியில் தாங்கினான். இங்ங்னம் அவ்வெம்பெருமானின் பெருமையைத் திரிமூர்த்திகளில் இரு மூர்த்திகள் போற்றினர். இத்தகைய எம்பெருமானின் சொரூபத்தையும் குணங்களையும் அறிவதற்கு நான்மறைகள், மற்ற சாத்திரங்கள் அனைத்தும் முயன்று தேடிக் களைப்படைந்து நிற்கின்றன. அவனோ தன்னை அடைய வேண்டியவர்கள் தன்னைத் தேட வேண்டாதபடி மிகவும் எளியனாய், ஒருசேமநிதி போல், தானாகவே அடியார்களிடம் நெருங்கி நிற்கின்றான். அவன் முன்பு ஆநிரையைக் காத்ததுபோல் இப்போது வேதமாகிய பசுவைக் கறந்து, அதன் சாரமாகிய பாலமிழ்தத்தை எடுத்து பாஞ்சராத்ரம் என்னும் சாத்திரமாகப் பொழிந்துள்ளான்; சேதநருக்கு இதுவே காப்பாகும் என்று உலகிற்கு வெளியிட்டருளியுள்ளான். கிருதயுக தருமத்தைத் தெளிவாகப் போதிக்கும் அந்தச் சாத்திரத்தை நாம் நன்கு கற்று இப்பிறவிப் பெருங்கடலின்று உய்யும் வழியை அடைந்தோம். இக்கருத்தினைக் கொண்ட வேதாந்த தேசிகரின், பூவலரும் திருவுந்திப் புனிதன் வையம் பொன்னடியால் அளந்திருவர் போற்ற நின்ற நாவலருங் கலைகளெலாம் தன்னை நாட நாடாத நன்னிதியாய் நணுகு நாதன் 1. திருப்பாவை- 3