பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளம் பூதங்குடிப் புனிதன் 1.33 கோவலனாய் நிரையளித்த நிறைபோல் வேதம் கோவாகக் கோமானாய் அதன்பால் சேர்த்துக் காவலிது நல்லுயிருக் கென்று காட்டும கார்த்தயுகக் கதிகண்டோம் கரை கண் டோமே." (பூ-தாமரை, திருவுந்திப் புனிதன்-நான்முகன், வையம் - உலகம்; தன்னை-தன் சொரூபத்தை; நாட-தேடிநிற்க, கோவலன்-கோபாலன்; கோ-பசு, கோமான்-இடையன்; இது-இந்த சாரம்; காவல்-காப்பு: கார்த்தயுகக்கதி-கிருதி யுகத் தருமத்தைப் போதிக்கும் பாஞ்சராத்ரம்; கண்டோம்-அறிந்தோம்; கரை-பிறவிப் பெருங்கடலின் கரை) என்ற பாடல் நம் மனத்தில் எழுந்தவண்ணம் கும்பகோணத்தி லிருந்து திருப்புள்ளம்பூதங்குடி என்ற திருத்தலத்திற்குப் பயண மாகின்றோம். புள்ளம் பூதங்குடி என்ற இத்திருத்தலம் மயிலாடு துறை-திருச்சி இருப்பூர்திப் பாதையில் சுவாமிலை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கிருந்து புள்ளம் பூதங்குடி போவதற்கு மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் கிடைக்கும். கும்போணத் திலிருந்து சுவாமி மலைக்குப் போகும் பேருந்து வழியிலிருப் பதால் கும்பகோணத்திலிருந்தும் போகலாம். தங்க வசதியுள்ள விடுதிகளும் உணவு விடுதிகளும் இங்கு உள்ளன. இராமபிரான் சடாயுவைத் தகனம் செய்து அப்புள்ளரசனைப் 'பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம்’ புகச் செய்த தலமாதல்பற்றிப் புள்ளம் பூதங்குடி என்ற திருநாமம் பெற்றது. பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போதும் இத்திருத்தலத் தை அடைந்த பிறகும் திருமங்கையாழ்வாரின் இத்திருத்தலம் பற்றிய பாசுரங்களில் நம்மனம் ஆழங்கால் படுகின்றது. திருமங்கையாழ்வார் ஒருவரே இத்திருத்தலத்தை மங்களா சாசனம் செய்துள்ளார். வழக்கம்போல ஆழ்வார் பாசுரங்களின் முற்பாதியில் எம்பெருமானைப் புகழ்கின்றார்; பிற்பாதியில் ஊர்ச் சூழ்நிலை, ஊர் நிலை இவற்றை விளக்கமாகப் பேசுகின்றார். இத்திருத்தலத்தின் சூழ்நிலை எப்படியுள்ளது? சோலை களில் நறுமணம் மிக்க மலர்கள்மீது சுரும்பு என்ற வண்டினங்கள் இருந்து கொண்டு இன்னிசை எழுப்புகின்றன; அழகு மிக்க 2. தேசகிப் பிரபந்தம்-197. 3. கம்ப. ஆரணி சடாயுஉயிர்நீத், 215. 4. பெரி. திரு 5.1