பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி மயில்கள் கூத்தாடுகின்றன; பொறி சிறை கொள் கொண்ட வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன் (1); தாழ்ந்திருக்கும் கழனிகளில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன; பறவைகள் இக்கழனிகட்குச் சென்று தம் குட்டிகட்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடுகின்றன(2); இங்குப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடும் ஒர் இதிகாசம்; முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாசுரத்தில் (5.1:2) பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக்கழனி யதனுள்போய் புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம்பூதங் குடிதானே. என்ற அடிகளில் 'பள்ளச் செறுவில் கயலுகள' என்பதாலேயே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்று கிடக்கின்றமை புலனாகிவிட்டது. அப்படியிருக்க ஈற்றடியில் 'புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்' என்று எப்படிச் சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேட வேண்டும்? கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான். இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது, 'பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற் போக்கு அறிந்தில்லை; 'பிள்ளைக்கு இரைதேடும்’ என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிகுதியாலே தூணும் துலாமும் போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குஞ்சுகளளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனையன்றோ என்றாராம். திருத்தலத்தைச் சுற்றிலுமுள்ள தோட்டங்களில் தென்னை மரங்கள் நிறைந்துள்ளன; அவற்றினின்றும் தேங்காய் நெற்றுகள் இற்று வீழுங்கால் மீன்கள் துள்ளி அப்பால் ஓடுகின்றன; கழனிகளிலும் தாமரை முதலிய பூக்கள் நிறைந்து காணப் பெறுகின்றன (3); சிவந்த கால்களையுடைய நாரைகள் கழனிகளில் நிறைந்துகிடக்கும் ஆரல்மீன்களைத் தமக்கு இரையாகக் கொள்வதற்கு வந்து சேர்கின்றன (5); ஒரு நாளும் வற்றாத நீர்நிலைகளில் உள்ள தாமரைப் பூக்களில் வண்டுகள் இருந்து இசைபாடுகின்றன ; புன்னை மரங்கள் பொன்னிறமான மகரந்தங்களை உதிர்த்து நிற்கின்றன (6) ; (இந்தப் பாசுரத்தின் ஆழ்வார் திருவாக்கைப் பேணி திருப்புள்ளம் பூதங்குடி