பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி நின்று பார்த்தனுக்குச் சாரதியாகத் தேரோட்டி னவன்; உருத்திரன் கையில் ஒட்டிக் கொண்டு ஒன்றாலும் நிரம்பாதிருந்த பிரம்ம கபாலத்தைப் பிச்சையிட்டு நிறைத்தவன் (8); மண்ணுலகமும், விண்ணுலகமும் இருளால் சூழப் பெற்று மூடிக்கிடந்த நாளில் அன்ன வடிவமாய் அவதரித்து அருமறைகளை வெளிப்படுத்தி அருளியவன் (9); இத்தனை அரிய செயல்களை ஆற்றின எம்பெருமானே திருப்புள்ளம் பூதங்குடியில் கோயில் கொண்டிருப்பவன். அர்ச்சையில் விபவங்களும் (இராமன், கண்ணன், வாமனன்) பரத்துவமும் அடங்கி இருப்பனவாகக் காட்டி எல்லா நிலை எம்பெருமான்களும் ஒருவனே என்பதை உணர்த்தும் வகையில் ஆழ்வார் பாசுரங்கள் அமைந்துள்ளன. இந்த எண்ணங்களுடன் திருக்கோயிலை வந்தடைகின்றோம். இத்தலத்து எம்பெருமானின் திருநாமம் வல் வில்லி இராமன் என்பது, திருமங்கையாழ்வார் இட்ட திருநாமம் (பாசுரம் 5.1:4). கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சயனத் திருக்கோலத்தில் (புயங்க சயனம்) சேவை சாதிக்கின்றான். தாயார் பொற்றாமைரையாள் என்ற திருநாமம் கொண்டவர். (5.1,15), தவிர, மூலவராகிய இராமன் கையில் திருவாழி திருச்சங்குகளுடன் காட்சி தருவது எங்கும் காணாத காட்சியாகும். அன்னையையும் அப்பனையும் திருமொழிப் பாசுரங்களை மிடற்றொலி கொண்டு உளங்கரைந்து ஓதி அவர்களின் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். 'கலிகன்றி, சொல்தான் ஈரைந்து இவை பாடச் சோர நில்லா துயர்தாமே" (10) என்ற படி 'துயரற்றவரானோம்' என்ற மன நிறைவு கொள்ளுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். "விரும்பி னவைஎய்து வினையனைத்தும் தீரும் மரும்பரம வீடும் அடைவீர் - பெரும்பொறிகொள் கள்ளம்பூ தம்குடிகொள் காயம் உடை யீர்அடிகள் புள்ளம்பூ தங்குடியிற் போம்' " (எய்தும் - கைகூடும்; தீரும் - நீங்கும்; பரம - சிறந்த; வீடு: மோட்சம்; அடைவீர்-சேர்வீர்கள்; பெரும் பொறி - வலிய ஐந்து பொறிகள், கள்ளம்வஞ்சனைக் குணம், பூதம் - பஞ்ச பூதங்கள்; காயம் - உடல்) 5. நூற். திரு. அந். 7