பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆதனுர் ஆண்டு அளக்கும் ஐயன் வைணவ தத்துவம் சித்து, அசித்து, ஈசுவரன் என்று மூவகையாகப் பேசப்பெறும். சித்து என்பது உயிர்களின் தொகுதி. அசித்து என்பது உயிரற்ற பொருள்களின் தொகுதி. ஈசுவரன், இறைவன். இந்த மூன்று தத்துவங்களும் தனித்தனி இயல்புடைய வேறு வேறு பொருள்களாகும். இவை அழிவே இன்றி என்றும் நிலை பெற்றிருப்பவை. இவை மூன்றும் எக்காலத்தும் ஒன்றோடொன்று சேர்ந்தே உள்ளன. இந்த நிலையை, 'திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப் படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும் உடல்மிசை உயிர்எனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே' என்று விளக்குவர் நம்மாழ்வார். இவற்றுள் இறைவன் சித்து (உயிர்), அசித்து (உடல்) இவை இரண்டினுள்ளும் அந்தர்யாமியாக உள்ளான். இதுவே இவற்றின் துண்ணிய நிலை (சூக்கும நிலை). மூலப் பகுதி விரிவடைந்து மக்கள் விலங்கு முதலியவற்றின் வடிவங்களாகவும், மற்றுமுள்ள பொருள்களாகவும் பரிணமிக்கின்றது. உயிர் தன்னுடைய புண்ணிய பாவங்கட்கேற்ப ஒவ்வோருடம்பை அடைகின்றது. இதுவே உயிருக்குப் பிறப்பாகும். இறைவன் மூலப் பகுதியின் விகாரமாகிய எல்லாப் பொருள்களுள்ளும் எல்லா உயிர் களுள்ளும் அந்தர்யாமியாக மறைந்துள்ளான். இதுவே இவற்றின் பரு நிலை (துல நிலை) 'திடவிசும்பு எரிவளி நீர் நிலம்’ என்ற பகுதியால் இப்பெரிய உலகங்களுக்குக் காரணமான ஐந்து பூதங்களைக் 1. திருவாய், 1.1.2