பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதனுார் ஆண்டு அளக்கும் ஐயன் 139 கூறுகின்றார் ஆழ்வார். உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் ஐந்து பூதங்களின் கூட்டுறவால் உண்டாவதை, "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்' என்று கம்ப நாடனும் குறிப்பிடுவன். இந்த ஐம்பூதங்களின் கூட்டுறவால் விரிந்துள்ள உலகப் பொருள்கள் எல்லா வற்றையும் உண்டாக்கினான் இறைவன். இவைமிசைப் படர் பொருள் முழுவதுமாய் என்பதால் , இஃது உணர்த்தப் பெறுகின்றது. 'ஆக்கி’ என்னாது ஆகி' என்றது 'இறைவனே எல்லாப் பொருள்களாகவும் விரிந்துள்ளான்” என்பதை வற்புறுத்தும் பொருட்டு. ? = 3 e 'அனைத்தும் நீ அனைத்துப் பொருளும் நீ’’’ என்ற பரிபாடல் அடியும் இதனை உணர்த்தும். அவை அவை தொறும் கரந்து எங்கும் பரந்துளன்' என்பதனால் அங்ங்னம் உண்டாக்கப்பெற்ற ஒவ்வொரு பொருளிலும் இறைவன் அந்தர்யாமியாக மறைந்தும், அவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எங்கும் பரந்தும் உளன் என்பது தெளிவாகின்றது. இந்த இருதன்மைகளும் அந்தர்யாமித்துவம்', என்றும் 'வியாபகத் துவம்' என்றும் மெய்விளக்க இயலார் குறிப்பிடுவர். 'அறிகிலேன்-தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்' என்று பிறிதோர் இடத்திலும் விளக்குவர். 'தன்னுள் அனைத் துலகும் நிற்க' என்றது வியாபகத் தன்மையை. தானும் அவற்றுள் நிற்கும் பிரான் என்றது அந்தர்யாமியாம் நிலையை. இங்ங்னம் இறைவன் எல்லாப் பொருள்களிலும் மறைந் துறைவது என்போல வெனின்! உடல் மிசை உயிர் எனக்கரந்துளன்',- உடலினுள் உயிர் எவ்வாறு உளதோ 2. கம்பரா. சுந்தர. காப்பு. 3. பரிபாடல்-3, அடி 68. 4. திருவாய் 9.6:4.