பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி அவ்வாறு அவ்வுயிர் உட்பட எல்லாப் பொருள்களிலுள்ளும் இறைவன் மறைந்து நிற்கின்றான். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் ஆதனுார் என்ற திவ்விய தேசத்திற்கு நாம் கும்பகோணத்தில் தங்கியிருக்கும் விடுதியினின்றும் புறப்படுகின்றோம். இந்தத் திருத்தலம் கும்பகோணத்தினின்றும் சுவாமிமலை வழியாகச் செல்லும் பேருந்து சாலையில் எட்டுக்கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. நாம் பேருந்தில் செல்லுகின்றோம். மயிலாடு துறை-திருச்சி சந்திப்பு இருப்பூர்தி வழியிலுள்ள சுவாமிமலை நிலையத்தினின்றும் இத்திருத்தலத்தை அடையலாம். நிலையத் தினின்றும் மூன்று கிலோ மீட்டர் தொலைவி லுள்ளது இத்திருத் தலம். புள்ளம் பூதங்குடி யினின்றும் இஃது ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இது மிகவும் சிறிய ஊர். இங்குக் கடை களோ, தங்குவதற்குச் சத்திரங்களோ, உணவு விடுதிகளோ இல்லை. திருமங்கையாழ்வார் மட்டிலும் இத்திருத்தலத்து எம்பெரு மானை மங்களாசாசனம் செய்துள்ளார். பெரிய திருமடலிலுள்ள, 'ஆதனுார் ஆண்டு அளக்கும் ஐயனை" (ஆண்டு-வருடம்) என்ற தொடர் காண்க. இந்த ஒரு வரியைத்தவிர நாலாயிரத்தில் வேறுபாசுரங்கள் இல்லை. எம்பெருமானின் திருநாமம் ஆண்டு அளக்கும் ஐயன் என்பது. கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு கிடந்த திருக் கோலத்தில் (புயங்க சயனம்) மரக்காலைத் தலையின்கீழ் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றான். இது காலதத்துவத்தைத் தன் ஆட்சியில் கொண்டுள்ளான் என்ப தனைக் குறிப்பிட்டவாறாம். தாயார் அரங்கநாயகியார் என்ற திரு நாமத்தால் வழங்கப்பெறுகின்றார். திருமங்கையாழ்வாருக்கும் காமதேனுவுக்கும் இந்த எம்பெருமான் காட்சி தந்ததாக வரலாறு. திருமங்கையாழ்வாரின் திருமேனி எம்பெருமான் தங்கியுள்ள கருவறையில் இருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். காமதேனுவுக்குச் சேவை சாதித்தது பற்றி இத்திருத்தலம் ஆ + தன் + ஊர் ஆதனுார் என்ற திருநாமம் பெற்றதாகச் சொல்வர். ஆ-பசு. ஆண்டளக்கும் ஐயனையும் தாயாரையும் திருமங்கை 5. கட்டுரை- 15 காண்க. 6. பெரிய திருமடல்-70