பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதனுர் ஆண்டு அளக்கும் ஐயன் 141 யாழ்வாரையும் மனமாறச் சேவித்து அவர்களின் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். இந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினை விற்கு வருகின்றது. 'இடரான ஆக்கை இருக்க முயல்வார் மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு நாதனுார் ஆதரியார் நானெனதென் னார்.அமலர் ஆதனுார் எந்தையடி யார்' (இடர் - துன்பம்; ஆக்கை - உடல்; மடவார் - மகளிர்; கடவுளர் - தேவர்கள்: நாதன் - இந்திரன்; ஆதரியார் - விரும்பார்; அமலன் - குற்றமில்லாதவன்) என்பது பாசுரம். திருமாலடியார்கள் தேகாபிமானம் கொள்ளா மலும், காம மயக்கத்திற்கு உட்படாமலும் நின்று சிற்றின்ப ஆசையை அறவே ஒழித்து அகப்பற்று புறப்பற்றுகளின்றி இருப்பர் என்பதைக் குறிப்பிட்டவாறு. இந்தப் பாசுரத்தை ஒதுகின்றோம். மன நிறைவுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 7. நுாற். திருப். அந்-9.