பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் இறைவன் ஆகாயத்தின்கண் ஒலியாகவும், தீயின்கண் அழிக்கும் ஆற்றலாகவும், காற்றின்கண் வன்மையாகவும், நீரின்கண் அளியாகவும், நிலத்தின்கண் பொறுக்கும் தன்மை யாகவும் உள்ளான். “கரவிசும்பு எரிவளி நீர்நிலம், இவைமிசை வரன் நவில் திறல்வலி அளியொறை ஆய்நின்ற பரன், ! (கரம் - திடம்; விசும்பு - ஆகாயம் : எரி - தீ ; வளி - வாயு ; நீர் - நீர்; நிலம் - பூமி, வான் - சிறந்த நவில், திறல், வலி, அளி, பொறை - இவை அடைவே ஐந்து பூதங்களின் பண்புகள், பரன் - சர்வேசுவரன்) என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு. முதலடியில் ஐந்து பூதங்களும், இரண்டாம் அடியில் அவற்றின் குணங்களும் சொல்லப் பெறுகின்றன. (1) விசும்பு-ஆகாயம்; அதன் குணம், நவில்-சப்தம் (2) எரி-தி; அதன்குணம், திறல்-எரிக்கும் ஆற்றல் (3) வளி-வாயு; அதன் குணம், வலி-மிடுக்கு (4) நீர்-நீர்; அதன் குணம், அளி-குளிர்ச்சி (5) நிலம்-பூமி, அதன் குணம், பொறை-பொறுமை என்பவை அறியத் தக்கவை. இங்ங்ணம் பரம்பொருளாகிய திருமால் எல்லாப் பொருள்களுள்ளும் எக்காலத்தும் விட்டுப் பிரியாது கலந்து அந்தர்யாமியாக இருக்கும் நிலை சரீர-சரீரி பாவனை (உடல்-உயிர்தொடர்பு) என்று கூறுப்பெறும். 1. திருவாய். 1.1:11.