பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரை கி.க்கும் கண்ணன் 143 உயிரல்லாத உலகப்பொருள் அனைத்திற்கும் மூலப் பகுதியே (பிரகிருதி) காரணமாகும். ஒருபொருள் உண்டாவதற்கு மூன்று காரணங்கள் கூறப்பெறுவதுண்டு. மண்குடமாக வனையப் பெறுமிடத்து, மண் முதற் காரணம் ; அதாவது, காரியமாக மாறுவது. அக் குடத்தை வனைபவன் நிமித்த காரணம். அவன் குடத்தை வனைவதற்குக் கருவியாக வுள்ள சக்கரம் முதலியவை துணைக் காரணம். உலகத் தோற்றத்திற்கு இறைவன் மூன்று காரணங்களாகவும் உள்ளான் என்பது வைணவ சமயக் கொள்கையாகும். சித்தும் அசித்தும் சூக் குமமாக (நுண்மையாக) இருக்கும் நிலையில் - அஃதாவது உலக உற்பத்திக்கு முன்னர்-அவற்றுள் இவறைவன் அந்தர்யாமியாக நிற்கும் நிலையே இறைவன் உலகத் தோற்றத்திற்கு முதற் காரணம்; நுண்ணிய நிலையிலிருக்கும் சித்து அசித்துகளை வெளிப்படுத்தி உலகப் படைப்பு செய்வோம் என்று எண்ணு கின்ற நிலையே இறைவன் உலகிற்கு நிமித்த காரணம். இறை வனுடைய ஞானம் சக்தி முதலியவையே துணைக் காரணம். ஆக, இம்முறையில் இறைவன் உலகப் படைப்பிற்கு மூன்று காரணங்களுமாகவும் உள்ளான் என்று மெய் விளக்க இயல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்டவண்ணம் கும்பகோணத்தில் நாம் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து கபித்தலத்தை நோக்கிப் புறப்படுகின்றோம். கபித்தலம் மயிலாடு துறை - திருச்சி இருப்பூர்திப் பாதையில் பாபநாசம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கிருந்து குதிரை வண்டி, மாட்டுவண்டி மூலம் கபித்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் பேருந்துமூலம் நாம் இவ்வூரை அடைகின்றோம். இவ்வூரில் சத்திரங்கள், உணவுவிடுதிகள், கடைகள் முதலியவை உண்டு. நேரே திருக்கோயிலுக்கு வருகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு கிடந்த திருக்கோலத்தில் (புயங்க சயனம்) சேவைசாதிக்கும் கஜேந்திரவ்ரதனை வணங்கு கின்றோம். தாயாரின் திருநாமம் இரமாமணி வல்லி. இவர் பொற்றாமரையாள் என்ற திருநாமத்தாலும் வழங்கப் பெறுகின்றார். இத் திருத்தல எம்பெருமான் கஜேந்திரனுக்குக் காட்சி தந்தமையால் கஜேந்திர வரதன்’ என்ற திருநாமம் பெற்றான். இப்பெருமான் அநுமனுக்குச் சேவை சாதித்