பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி தமையால் இவன் திருக்கோயில் கொண்டிருக்கும் ஊர் கபித்தலம் (கபி-குரங்கு, அநுமன்) என்ற திருநாமம் பெற்றது. இத்திருப்பதி எம்பெருமானைத் திருமழிசையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். “கூற்றமும் சாரா; கொடுவினையும் சாரா:தீ மாற்றமும் சாரா வகையறிந்தேன் - ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எமக்கு' (கூற்றம் - எமபயம்; கொடுவினை- கொடிய பாவங்கள்; சாரா - அணுகா, தீமாற்றம் - கெட்ட விஷயங்கள்; மாயன் - ஆச்சரிய பூதன்; உரை - சரம சுலோகம்) என்பது பாசுரம். 'நான்முகன் முதலிய தேவர்களுக்கு அடையத் தக்கவனாய் திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்ததருள்பவனே திருக்கபித்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ளான்; இப்பெரு மானே பண்டொருகால் பாரதப் போரில் தேர்த்தட்டில் நின்று பார்த்தனைப் பொருளாகக் கொண்டு அனைவருக்கும் உய்யும் பொருளான சரம சுலோகத்தை அருளிச் செய்தனன்; இந்தத் தத்துவப்பொருள் என் நெஞ்சில் பதிந்திருப்பதனால் இனி நான் எமபயம் அணுகாமலும் கொடிய பாவங்கள் அணுகாமலும், தீவிஷயங்கள் அணுகாமலும் இருக்கத் தக்க உபாயத்தை அறிந்தவனானேன்' என்கின்றார் ஆழ்வார். இப்பாசுரத்தில் கபித்தலம்’ என்கிற திருநாமம் தெளிவாக இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளக் கருத்தைக் கண்டறிந்து கூறும் பேராற்றலுடைய நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெரு மானார், பட்டர் முதலான ஆசாரிய பெருமக்கள் இது கபித் தலத்தை நோக்கின திருப்பாசுரமேயாகுமென்று அறுதியிட்டனர் என்பது உரை மன்னர் பெரிய வாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரான திவ்விய கவியாலும் தெரிவிக்கப் பெற்றுள்ளது. 'காணியும் இல்லமும் கைப்பொருளும் ஈன்றோரும் பேணிய வாழ்க்கையும் பேருறவும் - சேனில் புவித்தலத்தில் இன்பமும் பொங்கரவம் ஏறிக் கவித்தலத்தில் கண்துயில்வோன் கால்' 2. நான்.திரு-50 3. நூற். திரு அந்-27