பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் 145 (காணி- பூமி, இல்லம்- வீடு: ஈன்றோர்-பெற்றோர்; பேணிய-விரும்பிய, பேர் உறவு - நெருங்கிய உறவினர்; சேணில் - மறுமையில்; பொங்கு அரவம் - சீறும் ஆதிசேடன், கால் - திருவடி) என்பது பாசுரம். 'அநுபவப் பொருளும் அநுபவக் கருவியும் அநுபவ இடமும் எனக்கு எம்பெருமானின் கழலிணைகளே” என்கின்றார் அய்யங்கார். இந்தப் பாசுரத்தையும் ஓதி உளங் கரைந்த நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். சுப்பு - 11