பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருக்கண்ணங்குடிக் கண்ணன் திருமகள் கேள்வனான எம்பெருமான் எண்ணற்ற கல்யாண குணங்களின் கருவூலமாக இருப்பவன். இத்திருக் குணங்கட்கு ஒர் எல்லை இல்லை. பலவகைப்பட்டு எல்லை யற்றுக் கிடக்கும் இத்திருக்குணங்கள் மேன்மைக்கு ஏகாந்தமான குணங்கள் என்றும், எளிமைக்கு ஏகாந்தமான குணங்கள் என்றும் இரண்டு வகையாகப் பாகுபடுத்திப் பேசப்பெறும். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்பன போன்ற குணங்கள் பரத்துவகுணங்கள் (மேன்மைக் குணங்கள்) என்றும், செளலப்பியம், செளசீலயம், வாத்சல்யம் முதலிய குணங்கள் செளலப்பியக் குணங்கள் (எளிமைக் குணங்கள்) என்றும் வழங்கப்பெறும். பகவத் குணாநுபவம் பண்ணுபவர்களில் சிலர் பரத்துவ குணங்களையே அநுபவிப்பர்; சிலர் செளலப்பிய குணங்களிலேயே ஈடுபட்டுக்கிடப்பர். தனியான பரத்துவமும், தனியான செளலப்பியமும் கொண்டாடத் தகுந்தவையல்ல. மேருமலை கைலாயமலை போன்ற மலைகள் மிகச் சிறந்தவைதாம். ஆயினும், அவை ஒருவரும் எளிதாக அடைய முடியாதவையாலே பயனற்றவை யாகின்றன. அவைதாமே அறிஞர்கட்கும் கிட்டக் கூடியவையாக இருந்தால் எவ்வளவோ சீர்மை பெறும். இவ்விதமாக பரத்துவமற்ற செளல் பியமும் பயனற்றது. தெருக்களில் பரற்கற் கள் பல எளிதாகக் கிடைக்கின்றன. எவர் வேண்டுமானாலும் எளிதாக அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆயினும் அவற்றை விரும்புவாருண்டோ? அவை மணியும் மாணிக்கமுமாயிருந் தால் எவ்வளவோ பயன்படும். எனவே, வெறும் பரத்துவமும் வெறும் செளலப்பியமும் பயனற்றவை யாகின்றன. எம்பெருமான் இந்த இருவகைக் குணங்களாலும் நிறைந்தவன். அடியார்கள் கூசாமல் வந்து பணிவதற்கீடான