பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருககண்ணங்குடிக் கண்ணன் 149 நிறைவுற்ற நேரம். கோயிலின் சுற்றுப் புறம் தூய்மையாக்கப் பெற்று விரிவுபடுத்தப் பெறுகின்றது. திருக்கோயில் சிறியதுதான். இத்திருக்கோயிலில் சேவை சாதிக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? திருப்பாற் கடலில் பாம்பனையில் பள்ளி கொண்டிருக்கும் வியூகமூர்த்தியே திருக்கண்ணங்குடியில் அர்ச்சாவதார வடிவத்துடன் எழுந்தருளியுள்ளான். வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வின்அணை மேவி சங்கமார் அங்கை தடமலர் உந்திச் சாமமா மேனிஎன் தலைவன்' (வங்கம் - மரக்கலம்; மூந்நீர் - கடல்; வரி - கோடு; நிறம் - அழகு வாள் - ஒளி பொருந்திய, அரவு - பாம்பு; அணை - படுக்கை; மேவி - பொருந்தி; உந்தி - கொப்பூழ், சாமம் - நீல நிறம்; மேனி - உடல்) என்பது ஆழ்வார் திருவுள்ளம். மற்றும், இவனே கசேந்திரன் என்ற யானை அரசு முதலையால் கெளவப்பெற்று வருந்திய போது அம்முதலை துண்டாக அறும்படி திருவாழிப் படையை ஏவி, அந்த யானை சூட்ட நினைந்த தாமரைப் பூவை ஏற்றுக்கொண்டவன் (2); மூவுலகங்களும் பிரளய வெள்ளத்தில் மூழ்கித் துன்புற்ற காலத்தில் பேருருவமும் ஒற்றைக் கொம்பும் வாய்ந்த பெருமீனாகத் திருவவதரித்துத் தன் ஒரு செதிலினகத்தே கடல் வெள்ளம் ஒடுங்கும்படி செய்த பெருமான் (3); பண்டொருகால் மலைபோல் பெருத்த வடிவையும் வெளுத்த கோரப்பற்களையும் நெருப்போடொத்த கண்களையும் கொண்டவராக உருவமாய்த் திருவவதரித்து பூமிப் பிராட்டியின் பிரிவுத் துன்பத்தைப் போக்கிய பெம்மான் (4); மாவலியிடம் மூவடிமண் பெற்று ஏழுலகங்களையும் ஈரடியால் தாவியளப்பதாக விம்மி வளர்ந்த பெருமான் (5); இருபத்தொரு தலை முறையளவும் பூமியிலுள்ள அரசர்களின் குருதி வெள்ளத்தில் தீர்த்தமாடிக் கோபம் தணியப்பெற்ற பரசுராமனாகத் திருவதரித்தவன் (6); தனது மிடுக்கினால் தேவர்களைத் துன்புறுத்திய இராவணனை முடித்துக்கட்டிய பெருமான் இவன் (7); கழுத்தில் ஒலை கட்டிப் பாண்டவர்கட்காகத் துது சென்றபோது துரியோதனன் பொய்யான ஆசனத்தையிட்டுக் கொல்ல நினைத்தபோது 2. பெரி. திரு. 9.1:1.