பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி பெரிய திருமேனியையுடையவனாய் வளர்ந்து அவன் திட்டத்தைக் குலைத்தருளிய பெம்மான் இவன் (8); பார்த்தனுக்குச் சாரதியாக நின்று மாபாரதம் முடித்தருளிய மாயனே இவன்(9). இத்தகைய பெருமான் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமண்டலம்கொண்டு சேவை சாதிக்கின்றான். மிகப்பெரிய திருமேனி. எம்பெருமான் திருநாமங்கள் சியாமள மேனிப் பெருமாள், தாமோதர நாராயணன், உலக நாதன் என்பவை; திருத்தாயார் அரவிந்தவல்லி நாச்சியார், உலக நாயகி என்ற திருநாமங்களால் வழங்கப்பெறுகின்றார். எம்பெருமான் சந்நிதியில் ஆழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே (10) (நல்குரவு-வறுமை) என்றபடி பகவத் கைங்கரிய இலட்சுமி இடையறாதிருக்கும் என்ற உணர்வில் களிக்கின்றோம். இந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. கூறுபுகழ்த் தன்னடிக்கே கூட்டுவனோ இன்னமென்னை வேறுபடப் பல்பிறப்பில் வீழ்த்துவனோ - தேறுகிலேன் எண்ணங் குடியாய் இருந்தான்நின்றான்கிடந்தான் கண்ணங் குடியான் கருத்து. (கூறு - தேவங்களில் சிறப்பித்துக் கூறப்பெறும்; இன்னம் - இனிமேலும்; வீழ்த்துதல் தள்ளுதல். தேறுகிலேன் - அறியேன்; எண்ணம் - மனத்தை; குடியாய் - வாழும் இடமாகக் கொண்டு; கருத்து - அவன் திருவுள்ளம்) என்பது பாசுரம். 'என் மனத்தில் வந்து புகுந்து நிற்பதும், வீற்றிருப்பதும், பள்ளி கொள்வதுமாக இருக்கும் எம்பெருமான் அடியனுேக்கு நற்கதி அருள்வனோ? அல்லது பல்வகைப் பிறப்புகளில் அலைந்துழல வைப்பனோ? யாது செய்வனோ? அறிகிலேன்' என்கின்றார். அய்யங்காரின் கருத்து, 3. நூற். திரு. அந்-27.