பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. நாகை அழகியார் அழகு என்பது ஒரு தத்துவம். உலகில் அழகுக்கு ஒரு வரையறை காண்பது, அவ்வடிவத்தைப் படைப்பவரின் தொழிற் குறைவினாலேயன்றி, அழகென்னும் பொருளுக்கோ எல்லை இல்லை' என்று சித்தாந்தம் செய்து காட்டுவன் கம்ப நாடன் சூர்ப்பணகையின் வாய்மொழியாக'. இந்த அழகு காதலர்களை ஒருவர்பால் மற்றொருவரை ஈர்க்கும் பெற்றியது. சிலசமயம் பால் வேற்றுமையின்றி ஈர்க்கும் தன்மையது. சீதையைக் கண்டவுடன், அரவிந்த மலருள் நீங்கி அடியிணை படியில் தோயத் திருஇங்கு வருவாள் கொல்லோ என்றகம் திகைத்து நின்ற (அரவிந்தம்-தாமரை, இணை-இரண்டு; திரு-இலக்குமி, அகம்-மனம்) எனத் திகைத்து நின்ற சூர்ப்பணகை அழகு தன்னைப் படுத்தும் பாட்டைச் சொல்லுகின்றாள். கண்பிற பொருளில் செல்லா; கருத்தெனில் அஃதே; கண்ட பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக்கு" என்கின்றாள். 'சிறந்த மகளிரழகைக் கண்ட ஆடவர்க்குக் கண்ணும் கருத்தும் அவ்வடிவத்தை விட்டு நீங்காமல் அதிலே பதிந்து அழுந்துதல் உலகியற்கை; அங்ங்னமன்றி இவளழகு பெண்பாலாகிய எனக்கே கண்ணும் கருத்தும் வெளிச் செல்லாத 1. ஆரணி. சூர்ப்பண-60 2. மேலது.-59. 3. மேலது.-60.