பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகை அழகியார் 153 படி வியப்பைத் தருகின்றதே! இஃது ஆடவருக்கு எந்நிலையை விளைவிக்குமோ?' என அதிசயித்துத் திகைத்து நிற்கின்றாள் 'அழியா அழகுடையானிடம் தன் மனத்தைப் பறிகொடுத்த சூர்ப்பனகை. தாடகையின் வரலாறு கூறி அவளை முடித்தற்கென்று இராமனைக் கானகத்தில் நடத்திச் சென்ற விசுவாமித்திரன் இராமனது தோளழகில் ஈடுபட்டு அவனை, ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்" (அவாவும் - விரும்பும்) என்று விளித்துப் ப்ேசுகின்றான். இராமனது தோளினது அழகின் சிறப்பு நோக்கி ஆடவரும் மனத்தால் மகளிர் தன்மையை அடைந்து அத்தோளினால் தழுவப்பெற வேண்டுமென்று காதல் கொள்ளுமாறு உள்ளவனே' என்கின்றான். ஆகவே, மகளிர் 'அழியா அழகுடையானின்’ தோளழகில் ஈடுபட்டுக் காதல் கொள்வரென்பது கூற வேண்டியதில்லை. 'ஆடவர்' என்று பொதுப்படக் கூறிய தனால், முற்றுத் துறந்த முனிவரும் இவனழகில் துவக்குண்டு ஈடுபட்டு நைவரென்பது பெறப்படும். தண்டகாரணிய முனிவர்கள் இவனழகில் ஈடுப்பட்டுத் தழுவிக்கொள்ள நினைந்ததை யாவரும் அறிவர். இந்த நினைவைக் கிருஷ்ணாவதாரத்தில் இவர்கள் கோபிகையராகப் பிறந்து தம் நினைவை - ஆர்வத்தை - நிறைவேற்றிக் கொண்டனர் என்பதை நாம் அறிவோம். பக்தர்களை இவ்வழகு ஈடுபடுத்தும் பாடு சொல்லுந்தர மன்று. அழகியமணவாளனின் ஒவ்வோர் உறுப்பினழகிலும் ஈடுபட்டுப் பேசிய திருப்பாணாழ்வார், கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய் உண்ட வாயன்என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன்அணி யரங்கன்என் அமுதினைக் 4. பாலகா. தாடகை வதை-41.