பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகை அழகியார் 155 திருவடிகளின் ஒளிதான் ஆசன பத்மமாகத் தென்படுகின்றதா? நின் திருவரையின் சோதிதான் படிச் சோதி ஆடையாயும் பல்கலனாயும் கலந்ததுவோ? அடியேனுக்குத் தெரிய அருளிச் செய்ய வேண்டும்' என்கின்றார். ஒவ்வோரழகில் ஈடுபடுகின்ற காலத்தில் அஃதொன்றே சிறந்ததாய்த் தோன்றி நிற்கும் தன்மையை இப்பாசுரத்தில் தெரிவிக்கின்றார் ஆழ்வார். இந்நிலை இராமன் மிதிலைமா நகரில் உலாப் போந்தபோது அவனது திருமேனியழகினைக் கண்ட மாதரின் நிலையை நினைவூட்டுகின்றது. தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன; தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அஃதே; வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை வொத்தார்" (கமலம்-தாமரை, தாள்-திருவடி, வாள்கொண்ட வாளை யொத்த; ஊழ்-பெருமை; உருவு-வடிவு) ஒவ்வோர் உறுப்பையும் கண்டவர்கள் அதனதன் அழகிலேயே அழுந்தி விட்டார்கள். அதனதன் அழகுக்கு ஒர் எல்லைஇல்லாமையாலே அதனதனினின்றும் தம் கவனத்தைப் பிறிதோன்றில் திருப்ப முடியாது அதனதன் அழகிலேயே ஆழ்ந்து விட்டார்கள் என்பதைத் தெரிவிக்கின்றான் கவிஞன். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் கிழ்வேலூர் இருப்பூர்தி நிலையத்தில் திருவாரூரினின்றும் திருநாகையை நோக்கிச் செல்லும் இருப்பூர்தியில் ஏறுகின்றோம். ஊர்தி திருநாகை இருப்பூர்தி நிலையத்தை அடைந்ததும் நிலையத்திலேயே கைகால் முகங்களைத் துய்மையாக்கிக் கொண்டு விறுவிறு' என்று திருக்கோயிலைநோக்கி நடக் கின்றோம் நாகை அழகியாரைச்சேவிக்க. நம்மைப் போலவே திருக்கண்ணங்குடி எம்பெருமானைச் சேவித்த திருமங்கை யாழ்வாரும் திருநாகை அழகியாரைக் காண வந்ததை நினைக்கின்றோம். அவர் பெற்ற அநுபவத்தையே நாமும் பெற 8. பாலகா, உலாவி.19.