பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி முயல்கின்றோம். அவர் எங்கே? நாம் எங்கே? என்ற சிந்தனை யும் நம்மிடையே எழாமல் இல்லை. முயற்சி திருவினையாக்கும் அல்லவா? இந்த உண்மை பக்தி யநுபவத்திற்கும் விதிவிலக்கு இல்லையன்றோ? இத்திருத்தலத்திற்கு வந்த திருமங்கையாழ்வார் நாகை அழகியாரின் அழகிலே நெஞ்சைப் பறிகொடுத்துத் தம் ஆண் தன்மையை இழந்து பெண்மை நிலை எய்திப் பரகால நாடகியாகின்றார். தன்னை ஈடுபடுத்தின அழகையும் மற்றும் நடந்த செய்திகளையும் தோழியிடம் சொல்லுவதாகப் பாசுரங்களிட்டுப் பேசுகின்றார். இந்த ஆழ்வார் மட்டிலுமே இந்த எம்பெருமானை மங்காள சாசனம் செய்துள்ளார். திருக்கோயிலினுட் புகுந்து செளந்தரியராஜனைச் சேவிக் கின்றாள் பரகாலநாயகி. என்றைக்கும் எங்கும் கண்டறியாத திருக்கோலம் கொண்டிருந்தான் எம்பெருமான். அப்பெரு மானை இன்னா னென்று அறிய மாட்டிற்றிலள். முகத்தை நேரே பார்த்து முன்னிலையாக்கிச் சொற்கள் கூற முடியாதபடி சோதி வெள்ளம் அலை யெறிந்து தள்ளுகின்றது. அதனால் அப்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகையும் திவ்விய அணிகள் திவ்விய ஆயுதங்கள் இவ்ற்றின் பொருத்தங்களையும், சிருங்கார விலாசங்களையும், மற்றும் கண்ட அதிசயங்களையும் தன் தோழியுடன் சொல்லி வியக்கின்றாள். பொன்இவர் மேனி, மரக தத்தின் பொங்குஇளஞ் சோதி அகலத்து ஆரம் மின், இவர் வாயில்நல் வேதம் ஒதும் வேதியர், வானத்து ஆவர்; தோழி என்னையும் நோக்கிஎன் அல்குல் நோக்கி; ஏந்துஇளம் கொங்கையும் நோக்குகின்றார்; அன்னைஎன் நோக்கும்என்று அஞ்சுகின்றேன்; அச்சோ ஒருவர் அழகியவா." (மேனி - உடல்; அகலம் - மார்பு; ஆரம் - மாலை; அல்குல் - நிதம்பம் அச்சோ - ஆச்சரியம்) ‘'தோழி, நான் பெற்ற பேறே பேறு; அந்தோ! இழந் தாயே! நீ காணப் பெற்றிலையோ' என்கின்றாள் பரகால நாயகி 9. பெரி. திரு. 9.2:1