பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகை அழகியார் 157 தோழியை நோக்கி. 'நங்காய், என்ன அற்புதம் காணப் பெற்றாய்? விரித்துரையாய்' என்று வினாவுகின்றாள் தோழி. திவ்வியாத்தும சொரூபம், திவ்வியகுணம் முதலானவற்றை யெல்லாம் விட்டு முந்துற முன்னம் திவ்விய மங்கள விக்கிரகத்திலே தன் நெஞ்சு பறியுண்டமை தோன்றச் சொல்லு கின்றாள். 'பொன் இவர் மேனி' என்கிறாள். பொன் நிறம் போன்ற நிறமுடையவளான பெரிய பிராட்டியின் இடைவிடாத சேர்க்கையினாலே எம்பெருமானுடைய கரிய திருமேனியும் அப்படியே பொன்நிறமாக ஆய்விடுகின்றது. உண்மையான உருவத்தின் நிறம் அடுத்து பேசப் பெறுகின்றது. 'மரகதப் பச்சையின் சோதி போன்ற சோதி யுடைத்தான திருமார்பிலனிந்த திருமாலை மின்னல் போன்றிரா நின்றது' என்கிறாள். 'இவர் பொன்;மேனி மரகத்தின் பொங்கிளஞ்சோதி; அகத்து ஆரம் மின்' என்று மூன்று வாக்கியமாக எடுத்துக் காட்டுவார் பிள்ளையமுதனார். பரம வைதிகர் என்றும், விஷயாந்தரங்களில் சிறிதும் கருத்தில்லாதவர் என்றும் தோன்றும்படி வேதங்களை உருச்சொல்லிக் கொண்டிருந்தார் போலும். இதனால் 'இவர் வாயில் நல்வேதம் ஒதும் வேதியர்' என்கின்றாள். மேன்மையைப் பார்த்தால் தேவர்களோடொக்கச் சொல்லலாம்படி இருந்தார். ஆகவே, 'வானவர் ஆவர்' என்கின்றாள். 'வடிவழகைப் பார்த்தால் அரசர்களுடன் ஒப்பச் சொல்லலாம். பேசுகிற பேச்சைப் பார்த்தால் வேதம் ஒதும் வேதியர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். மேன்மையைப் பார்த்தால் வானவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். ஆகவே இன்னாரென்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையே தோழி!' என்கிறாள். தோழியானவள் தலைவியை நோக்கி, நங்காய் அது இருக்கட்டும். அவரை நீ ஏறிட்டு நோக்கினாயா? அவர் நின்னை நோக்கினது உண்டோ?' என்று வினவ, அதற்கு அவள் 'கேளாய்! அதையும் சொல்லுகின்றேன். என்னையும் நோக்கி, என் அங்குலும் நோக்கி, ஏந்திளங் கொங்கையும் நோக்கு கின்றார்” என்கிறாள். "மர்மங்களில் கடாட்சியா நின்றார்; பார்த்த