பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி பார்வை ஒருகால் மாற வைக்கிலர்' என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம். 'நம்மைப் பாங்காக அநுபவிப்பதற்குறுப்பான பக்தி இவ்வாழ்வார்க்கு முதிர்ந்ததோ என்று எம்பெருமான் ஆராய்ந்தமையைச் சொல்லியதாக இதனைக் கொள்ள வேண்டும். போகத்திற்குக் கொங்கை முதலிய உறுப்புகள் எப்படி இன்றியமையாதனவோ அப்படி பகவதநுபவத்திற்குப் பரபக்தி பரஞானம் பரமபக்தி நிலைகள் இன்றியமையாதன வாதலால் உள்ளுறையில்-அவற்றைப் பொருளாகக் கொள்ளல் வேண்டும். - 'அவர் நின்னை நோக்கினபோது நீ செய்ததென்?’ என்று தோழி கேட்க, 'அன்னை என் நோக்கும் என்று அஞ்சு கின்றேன்?' என்கின்றாள் தலைவி. அவர் பார்த்த பார்வை எல்லாம் எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த நிலைமையை நம் தாய் காண்பாளாகில் என்ன பாடு படுத்துவளோ என்று அஞ்சி நிற்பதே என் கருமமாயிற்று' என்கின்றாள். '"நான் பதறி மேல் விழுவேன்; இதனைத் தாய் நோக்கினாளாகில் என்னாகுமோ? என்று அஞ்சி ஒழிந்தேன்’ என்பது குறிப்பு. பெற்று வளர்த்துப் பெண்பிள்ளை இளமைப் பருவத்தில் தலைவனிடத்துள்ள அன்பு மிகுதியால் அவன் இருப்பி டத்துக்குச் செல்ல வேண்டும்; அவன் மேல் விழுந்து அநுபவிக்க வேண்டும் என்று பதறும்போது அங்ங்னம் படி நடந்து புறப்படுதல் குலமரியாதைக்குப் பொருந்தாது என்று தடுத்து நிறுத்துபவள் உலகில் தாய் எனப்படுபவள். சித்தோபமயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றைத் தாமதித்துப் பெறுதலில் காரணமில்லாமையாலே அதனை விரைவில் பெறுதல் வேண்டுமென்கிற ஆவலைப் பிறப்பித்து அதனால் படி கடந்து நடக்க வேண்டிய நிலை ஏற்படுபொழுது இது பிரபந்நர் குடிக் கட்டுப்பாட்டிற்குச் சிறிதும் சேராதென்று விலக்கி ‘எம்பெருமான் தானே வந்து ஆட்கொள்ள வேண்டும்’ என்று சொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற நம: பதத்திற் கூறப்பெற்ற உபாய அத்யவசாயமாகின்ற பிரஞ்ஞாவஸ்தையை (உணர்வு நிலையைத்) தாய் என்று உள்ளுறையாகக் கொள்ள வேண்டும் என்று ஆசாரிய ஹிருதயம் விரித்துப் பேசும். ஆகவே, இங்கு, 'அன்னை என் நோக்கும் என்று அஞ்சு