பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி கருங்கடலை யொத்துள்ளது. இத்தகைய பெருமானை நான் எங்குங் கண்டதாக நினைவில்லை. இவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்று காண்! இவர் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு வாழ்ந்திடுக(5). ‘'தோழி, இவரைப் பார்த்தால் கம்சன் அரண்மனை வாயிலில் மதமூட்டி நிறுத்தி வைக்கப்பெற்ற வேழத்தின் மருப்பொசித்துக் கொன்ற கோவலன் போன்றுள்ளார்; அவர் தானோ இவர்? அணிகள் பூண்ட மங்கையர்தம் நெஞ்சைத் தஞ்சமாகவுடையவரோ இவர்? இன்னாரென்று அறுதியிடக் கூடவில்லையே! தாமரை போன்ற திருக்கண்கள் இருக்கும் அழகை என்னென்று சொல்வேன்! முன்பு கஞ்சனை மஞ்சத்தி னின்றும் தள்ளித் திருத்தாளால் உதைத்த தனி வீரராகவே தோன்றுகின்றார். இராவணனைப் போன்ற வணங்காமுடிகளும் இவரைக் கண்டவாறே பரவசப்பட்டு வணங்கும்படியன்றோ இவர்தம் அதிசயம் இருப்பது? ஒர் அஞ்சனக் குன்றம்தான் இங் ங்னம் வடிவம் கொண்டு நிற்கின்றதோ? என்னலாம்படி இருக் கின்றார் காண். வாய் கொண்டு சொல்ல வொண்ணாத பேரழகு படைத்த இவர் திறத்தில் நான் என்னவென்று சொல்வேன்? (6). 'தோழி, தாமரை மொட்டை மலர்விக்கச் செய்யவல்ல பேரருளாளரான ஆதித்தியனோ இவர்? இவரைப் பார்த்தா வாறே என்பக்கல் நினைவின்றியே என் நெஞ்சு இவரை வணங்கி நிற்கின்றது. உன்னையறியாமல் எனக்கு வரும் நன்மை யொன்றுமில்லையே! அப்படியிருந்தும் உன்னையும் என்னையு மறியாமல் இப்படி ஒரு நன்மையுண்டானது என்னே! இவர் செய்கின்ற காதல் விளையாட்டுகளோ நெடு நாளாக மிகப் பழகியவர் செய்பவைபோல் உள்ளன. ஆயினும், இதற்கு முன்பு இவரைக் கண்டதாகவும் எனக்கு நினைவு இல்லை. உற்றுநோக்குகின்ற திருக்கண்களும் அணைக்க முற்படு கின்ற திருக்கைகளும் திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாம் படி உள்ளன. திருவடிவமோ மேகத் திரள் என்னலாம்படி உள்ளது. இவர்தம் அழகுக்கு யாரே ஒப்புச் சொல்லவல்லார்? (7); மேகமண்டலத்தளவும் செல்லும்படி ஓங்கி மாமதி வந்து தீண்டும்படியாக உயர்ந்துள்ள திருமாலிருஞ்சோலை மலையை இருப்பிடமாகக் கொண்டுள்ள மாலிருஞ்சோலை மணாளர் தாமே என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் எழுந்தருளி ஒரு நொடிப் பொழுதும் நீங்குகிற்றிலர்; திருநீர்மலை எம்பெருமான் போலவும்