பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகை அழகியார் 161 திகழ்கின்றார்; அறுதியிட்டுச் சொல்லமுடியாத நிலையிலுள் ளேன். மிக உயர்ந்த பொன்மலைமேலே காள மேகம் படிந்து வருமாப்போலே பெரிய திருவடியின்மீது வீற்றிருந்து எழுந் தருளுங் கோலத்தை வந்து காணுங்கள்! இவருடைய அழகுக்குப் பாசுரமிட என்னாலாகுமா? (8)" 'தோழி, இப்பெரியாரைக் கண்டதும், 'இவர் ஆபத்துக்கு உதவுபவர்' என்று நினைக்கத் தோன்றுகின்றது. திக்குகள் எட்டிலும் வந்து அலையெறியா நின்றுள்ள கடல்களையும் ஏழுலகங்களையும் ஒருசமயம் திருவயிற்றில் வைத்துப் பிரளயம் கொள்ளாதபடி காத்து ஒரு சிறிய ஆலந்தளிரில் துயில் கொண்ட ஆச்சரியன் என்று தோன்றும்படி உள்ளார். 'கூடாதவற்றையும் கூட்டுவிப்பவர் இவர் என்று தெரிகின்றது. ஆயினும், இவர்தம் வியத்தகு செயல்களை நான் அறிகின்றிலேன். திருவுருவத்தை நோக்கினால் மேகம்போலவும் மலைபோலவும் தோன்று கின்றது. திருக்கண்களும் திருப்பவளமும் நறுமணங் கமழும் தாமரைபோல் உள்ளன. இவர்தம் மேன்மைக்குத் தக்க மேன்மை யுடையவர்களே இவரைக் கிட்டலாமேயன்றி நமக்குக் கிட்ட வொண்ணாது என்று பின்வாங்க நேர்ந்தாலும் இவர்தம் பேரழகு நம்மைப் பின்வாங்க வொட்டுகிறதில்லை (9). பரகாலநாயகியின் நிலையை நாமும் அடைய முயல் கின்றோம். அஃது அவ்வளவு எளிதானதா, என்ன? அவனருள் இருந்தால்தான் அது இயலும். ஏதோ ஒருவிதமாக அவள்” நிலையை ஏறிட்டுக் கொண்டு திருக்கோயிலினுள் புகுந்து கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு , நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் செளந்தரியராஜனை - நாகை அழகியாரைச் சேவிக்கின்றோம். தாயாரின் திருநாமம் செளந்தரியவல்லி. அவரையும் சேவிக்கின்றோம். தீர்த்தமும் திருத்துழாயும் பெற்று, சடகோபம் சாதிக்கப்பெற்று திருக்கோயிலைச் சுற்றி வரு கின்றோம். புராணங்களில் இத்திருக்கோயில் செளந்தரநாராயண கூேத்திரம் என வழங்கப் பெறுகின்றது. இங்கு எம்பெருமான் மூன்று நிலைகளில் காட்சி தருகின்றார். சயனத் திருக் கோலத்தில் அரங்கநாதரும், இருந்த திருக்கோலத்தில் கோவிந்தராசரும், நின்ற திருக்கோலத்தில் செளந்தரியராசனும் சேவை சாதிக்கின்றனர். 10. 'அஞ்சிறைப் புள்ளும் ஒன்றேறி வந்தார்’ என்றதனால் ஆழ்வார் இத்திருப்பதியில் கருடோத்சவம் சேவிக்கப் பெற்றதாகத் தோன்றுகின்றது. சுப்பு - 12