பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி நாகை அழகியாரின் விமானத்திற்கு ஐந்து கலசங்கள் உள்ளன. இது எங்கணும் காணப்பெறாதது. திருமால் துருவனுக்குக் கருடன்மீது இவர்ந்து சேவை சாதித்தது இத்திருத்தலத்தில். திருத்தாயாரின் உற்சவமூர்த்தி கஜலட்சுமியாக அமைந்துள்ளது. திருநாகையில் பெரிய கோபுரம் நாகை அழகியாரின் இராசகோபுரம்தான். இதனைத் தவிர பதினைந்து விமானங்கள் உள்ளன. அரங்கநாதர், கோவிந்தராசர், பச்சை வண்ணர், பவளவண்ணர், வரதராசர், இராமர், சீநிவாசர், வைகுந்த நாதர், ஆண்டாள், ஆஞ்சனேயர், ஆழ்வார்கள் இவர்கட்குத் தனித்தனி சிறுகோயில்கள் இத்திருக்கோயிலினுள் அமைந்துள்ளன. பெரிய திருவடிக்கும் தனிக்கோயில் உண்டு. இவர் இருந்த திருக்கோலத் தில் காட்சி தருகின்றார். இத் திருத்தலத்தின் மற்றோர் அரியகாட்சி அட்டபுய நரசிம்ம சுவாமியின் சேவை. இங்கு இவர் இரணி யனைக் கொல்வதால் துஷ்டநிக்ரகத்தையும், பிரகலாதனுக்கு அருள் புரிவதால் சிஷ்டபரிபாலனத்தையும் ஒரே சமயத்தில் செய் வதாக அமைந்துள்ளது. இது எங்கும் காணாத காட்சியாகும். இவற்றையெல்லாம் சேவித்துக் கொண்டு இராச கோபுரத்தருகில் வருகின்றோம். ஆழ்வாரின் திருப்பாசுரங்களை மிடற்றொலி கொண்டு சேவிக்கின்றோம்; பரகால நாயகியின் நிலையை அடைந்து விடுகின்றோம். இந்தப் பாசுரங்களை ஒதவல்லவர்கள், மன்னவ ராய்உல காண்டு மீண்டும் வானவ ராய்மகிழ் வெய்துவரே (10) என்றவாறு இப்பூவுலகில் பேரரசர்களாயும் அதற்கு மேலும் முக்தர்களாகியும் பேரானந்தம் அடைவார்கள் என்ற அநுபவத் தையும் அடைகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவிற்கு வருகின்றது. சேர்ந்துணக்குக் குற்றேவல் செய்திலனென் சிந்தையில்நீ ஆர்ந்ததற்கோர் கைம்மாறு அறிகிலேன் - பூந்துவரை மன்னா கையாழி வலவா வலம்புரியாய் தென்னாகை யாய்அருளிச் செய்." 11. நூற். திரு. அந்-19