பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கண மங்கைக் கற்பகம் 'பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே." என்ற வாக்கியம் நம் சிந்தையில் எழுகின்றது. இதனை அசை போடுகின்றோம். இங்கு பிராப்தா-அடைகிறவன்; பிராபகன் - அடைவிப்பவன்; பிராப்தி - அடைதல். அடைவிக்கின்றவன் ஈசுவரன் ஆனாலும், அடைகின்றவனும் பேற்றிற்கு உகக்கின்றவனும் இவன் (சீவன்மா) அன்றோ? நிலைமை இங்ங்னம்இருக்க இவன் நினைவினை இப்படி நேராகத் துடைக்கலாமா? என்ற வினாக்கட்கு விடையாக அமைந்துள்ளது இந்த நூற்பா. சீவான்மாவின் தன்மைகளுள் உபாயமாகும் தன்மை சிறிதும் இல்லை என்று துடைத்து, ஈசுவரனே உபாயம்’ என்று அறுதியிட்ட போதே அடையும் தன்மையும் பேற்றில் வரும் உகப்பும் இவனுடைய தல்ல என்பதும் உபாயமாக இருக்கின்ற ஈசுவரனுடைய தன்மைகளாகவே பலித்து விடுகின்றன. ஆகவே, மேற்குறிப்பிட்ட வாக்கியம் நுவலும் மூன்று பொருள்களும் இறைவனாகின்றன. இதனை இன்னும் சற்று விளக்குவோம். பிராப்தா அவன் ஆகையாவது எங்ங்னம்? என்பதை ஆராய்வோம். சொத்தள்க இருக்கும் தன்மை ஆன்மாவினிடத்தில் உள்ளது; சுவாமியாக இருக்கும் தன்மை பரம்பொருளான நாராயணனிடத்தில் உள்ளது. இந்த உடைமை-உடையவன் என்னும் சம்பந்தம் அடியாக, உடைமையை அடையும் உடையவனைப் போலவே, இவ்வான்மாவை அடைகிறவன் இறைவனாகவே உள்ளான். ஆன்மா இறைவனுடைய திரு மேனியாகவுள்ளது என்பது சரீர-சரீரி பாவனையால் பெறப் படுகின்ற உண்மையன்றோ? 1. நீ வச. பூஷ - 17 (புருடோத்தம நாயுடு பதிப்பு)