பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண மங்கைக் கற்பகம் 1.65 பிராபகன் அவன் ஆகையாவது எங்ங்னம்? என்பதையும் சிறிது சிந்திப்போம். இறைவனாகிய தான் இவனை (சீவான் மாவை) அடையுமிடத்தில்அடைவிக்கும் உபாயமும், முற்றறி வினையுடையவனாயிருத்தல், எல்லா ஆற்றல்களையுமுடைய வனாயிருத்தல், சத்திய சங்கல்பனாயிருத்தல் முதலான குணங் ளோடு கூடினவனாய்த் தடை இல்லாத சுவதந்திரத்தை (Independence)யுடையவனான தானாகவே இருக்கின்றான். பிராப்திக்கு உகப்பானும் அவனே என்ற கருத்தையும் ஆராய்வோம். உடைமையை அடைகின்ற காலத்தில் அதனைத் துய்க்கின்றவனான தலைவன் மிக்க மகிழ்ச்சியை அடையுமாறு போலே இவனை (சீவான்மாவை) அடைந்தால் 'அடையப் பெற்றோம்’ என்று உகப்பானும் இவ்வான்மாவினை எப்பொழு தும் துய்த்துக் கொண்டிருப்பவனான இறைவனாக இருத்தல். 'இம் மூன்றும் அவனே என்ற ஏகாரத்தால் இம்மூன்றனுள் இவனோடு சேர்வது ஒன்றும் இல்லை என்பது பெறப்படு கின்றது. இதில் 'பிராப்தாவும் பிராபகனும் அவனே என்கை யாலே அவனை அடைவதற்கு வேறு சாதனங்களைச் செய்யும் தன் முயற்சி இவனுக்கு இல்லை என்னும் இடமும், 'பிராப்திக்கு உகப்பானும் அவனே' என்கையாலே அவனுடைய இன்பத் திற்கும் முக உல்லாசத்திற்கும் தான் இருக்கின்றானே தவிர, தன் பயனில் தனக்குச் சம்பந்தம் இல்லை என்னுமிடமும் பெறப்பட்டன. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் திருவாரூரில் நாம் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து திருக்கண்ண மங்கை என்னும் திவ்வியதேசத்திற்குப் புறப்படுகின்றோம். இத்திருத்தலம் திருவாரூருக்கு மேற்கே சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. திருவாரூரிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் பேருந்தில் சென்று வழியிலுள்ள திருக்கண்ணமங்கை யில் இறங்குகின்றோம். சாலையிலிருந்து மேற்கே நடந்து திருக் கோயிலை அடைகின்றோம். இடம், தீர்த்தம், மண்டபம், விமா னம், நதி, நகரம், ஆரண்யம் என்ற ஏழு தனிச் சிறப்புகளைக் கொண்டிருத்தலால் இத்திருக்கோயில் 'சப்தாமிர்த சேஷத்திரம்’ (ஏழு அமுதங்களைக்கொண்ட திருக்கோயில்) என்ற திருநாமத் தால் திகழ்கின்றது. திருக்கோயிலுக்கு முன்னதாகத் தென்படுவது திருக்குளம்; புஷ்கரிணி, தரிசன புஷ்கரிணி என்ற திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றது. இது சந்திரனுடைய சாபத்தைத் தீர்த்ததாகச்