பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி சொல்வர். பெயருக்கேற்ப தரிசனத்திற்கு மட்டிலுமே ஏற்றது. இறங்கி நீராடுவதற்கு ஏற்றதன்று. ஆகவே, நேராகத் திருக் கோயிலுள் நுழைகின்றோம். திருக்கோயிலினை அடுத் திருப்பது 'பதரி வனம்' என்ற காடு. திருக்கோயிலின் வடபுறமும் தென் புறமும் காவிரி இரண்டாகப் பிரிந்து எம்பெருமானுக்கு மாலை யிடுவதுபேர்ல் சிற்றோடைகளாகச் செல்லுகின்றது. திருக்கோயி லினுள் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இது 'ரு மண்டபம்’ என்ற பெயருடன் திகழ்கின்றது. மகா இலக்குமி இந்த மண்டபத் தில் தவம் இயற்றி எம்பெருமானை மணந்ததாக வரலாறு. இலக்குமி இங்குள்ள திருத்தலத்தில் தீர்த்தமாடிய பின்னரே எம்பெருமான் இவரை மணந்ததால் இவர் 'அபிஷேக வல்லி' என்ற திருநாமத்தால் திகழ்கின்றார். கோயிலினுள்ளிருக்கும் பெரிய திருவடி நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கையுடன் பக்தர்கட்கு வரங்களைத் தருவதற்குக் காத்திருக்கிறார். இத்திருத்தலத்து எம்பெருமானின் திருநாமம் பக்தவத்சலர் என்பது. கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெரிய திருமேனியை யுடையவர். தாயாரின் திருநாமம் அபிஷேகவல்லி என்பது. திருமங்கையாழ்வார் மட்டிலுமே 15 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார். பெரிய திருமடலில் ஆழ்வார் ‘கண மங்கைக் கற்பகம்’ என்ற திருநாமமிட்டு இனியராகின்றார். நாம் ஆழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் கொண்டு சேவிக் கின்றோம். பெரும்பு றக்கடலை,அடல் ஏற்றினை பெண்ணை, ஆணைஎண்இல்முனிவர்க்குஅருள் தரும்த வத்தை,முத் தின்திரள் கோவையைப் பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை அரும்பி னை,அல ரை,அடி யேன்மனத்து ஆசை யை,அமு தம்பொதி இன்சுவைக் கரும்பி னை,கனி யை-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே." 2. திருநின்றவூர்ப் பெருமாளின் திருநாமமும் இதுவே. இவரும் பத்தராவிப் பெருமாள் என்று வழங்கப்பெறுவர் (தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - காண்க) 3. பெரி. திரு. 7.6;5. 7.10; 10.1:1; 11.6:7; மடல்கள் இரண்டிலும். 4. மேலது - 7.10:1