பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண மங்கைக கற்பகம் 167 (அடல் ஏறு - செருக்குடைய காளை; தவம் - தவப்பயன்; கோவை மாலை, பத்தர் ஆவி பக்தர்கட்கு உயிர் போன்றவன்) என்பது பாசுரம். இதிலும் இதனைத் தொடர்ந்து வரும் ஒன்பது பாசுரங்களிலும் எம்பெருமான் தன் படிகளை எல்லாம் காட்டிக் கொடுத்தமையைப் பரக்கப் பேசி மகிழ்கின்றார் ஆழ்வார். திருக்கண்னமங்கை எம்பெருமான் எப்படிப் பட்டவன்? இதற்கு விடையாக ஒன்பது பாசுரங்களிலும் எம்பெருமானின் படிகள் விசதமாக நுவலப்பெறுகின்றன. 'பரந்த கடல்போலே அளவிட முடியாத சொரூப சுபாவங்களையுடையவன்; செருக்குடைய காளைபோல் மேனாணிப்புள்ளவன்; பெண்ணைப்போல் பாரதந்திரியமே வடிவாயிருப்பவன்; ஆணைப்போல் சுவா தந்திரிய மாயிருப்பவன்; எண்ணிறந்த யோகியருக்கு அருள் பாலிக்கும் தவப்பயனாயுள்ளவன்; முத்தின் திரளாகிய மாலை போன்றவன்; பக்தர்கட்கு உயிர்நிலை யாயிருப்பவன்; முத்துக் குவியல் போன்றிருப்பவன்; அரும்புபோல் இளமையுள்ளவன்; மலர்ந்த பூப்போல் யெளவன பருவமுள்ளவன்; அடியேன் மனத்தில் புத்தம் புதிதாக எழும் ஒசைக்கு இலக்கணமானவன்; அமுதத்தை நீராகப் பாய்ச்சியதனால் வளர்ந்த இன்சுவையுள்ள கரும்புபோல் இனிமையுடையவன்; கனிபோல் கண்டபோதே நுகரத் தக்கவன் (1). பக்தியோகத் திற்குத் துாண்டுபவன்; பரமபதம் அளிக்கவல்ல பிரபத்தி யோகத்திற்கு ஏவுபவன்; அன்பு இல்லாதார்க்குப் பொய்யன், திருவாழியைத் திருக்கையி லுடையவன்; கடல்நிற வண்ணன், எல்லாரிலும் மேம்பட்டவன்; ஆலிலையில் பள்ளிகொண்ட ஆச்சரியன்; நேற்றைப் போதில் நுகரப்பெற்ற பொருள்போல் நெஞ்சை விட்டகலாத யோக்யதையையுடையவன். இன்று அநுபவிக்கப்பெறும் பொருள் போன்றவன்; மேலுள்ள காலமும் இப்படியே அநுபவிக்க உரியவன்; திங்கள் ஆண்டு இவற்றிற்கு நிர்வாககன்; கன்னற் கட்டிபோன்றவன்; கருப்பஞ்சாறு போன்றவன் (2). வேறு புகலற்ற அடியேன் போல்வார் திறத்தில் காரண மில்லாமல் கருணை காட்டுபவன்; சிவனைத் தன் திருமேனியில் வைத்து அதனைத் தன் பேறாக உகந்திருக்கும் சீலகுணத்தாற் சிறந்தவன். எப்போதும் இத்திருக்குணத்தையே இயல்பாக வுடையவன்; பனிமா மதியம் தவழப் பெற்ற ஆகாயமாக இருப்பவன்; வடவேங்கடத்தின் கொடுமுடியைத் தன் இருப்பிட மாகக் கொண்டவன்; நம்மால் விரும்பி வணங்கப் பெறு பவன்:போகம் அநுபவிப்பதற்கான பகல் இராப் பொழுதுகட்கு