பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி நாயகன் (3). பேய்ச்சி முலையிலுள்ள நஞ்சினை அமுது செய்த சிறுக்கன்; தெள்ளியார் வணங்கப்பெறும் தேவன்; திருக் கோவலூரில் இடைக்கழியில் முதலாழ்வார்களால் நெருக்குண்ட இளங்குமரன்; அந்தணர்களின் சிந்தையுள் புகுந்து அவர்களைத் தன்வழியே நியமித்துக் கொண்டிருப்பவன்; பிரகாசமே வடிவாகவுடையவன்; இத்தன்மைகளால் அடியேனை ஆட்படுத்திக் கொண்டவன்; எய்ப்பினில் வைப்பாக இருப்பவன்; பொன்னும் மணியும்போல் எல்லாராலும் விரும்பப் பெறுபவன் (4). நித்தியானந்தத்தால் காளைபோல் மிடுக்குடையவன்; இமயத் திருப்பிரிதியில் தன் இருப்பைக் காட்டி அடியேனை வயப்படுத்திக் கொண்டவன்; இம்மை மறுமைப் பயன்களை விரும்புவார்க்கு அளிக்க வல்லவன்; தான் விரும்பும் மனிதர்களை பரமபதத்தில் கொண்டு வைக்க வல்லவன்; கையில் திருவாழியாழ்வானிருப்பதனால் எதிரிகட்கு எமன்போன்றவன்; திருநின்றவூரில் முத்துத்திரள் போல் வடிவு கொண்டு எழுந்தருளி யிருப்பவன்; நீலமணிமயமான மலை போன்ற வடிவையுடையவன்; ஊற்றின்பத்தைத் தரும் தென்றல் போல் விரும்பத் தக்கவன்; நீர்போல் உயிர் தரிப்பிற்கு ஏதுவானவான் (5). நினைத்ததை நினைத்தவாறு செய்து தலைக்கட்டிக் கொள்ளவல்ல சாமர்த்தியன்; கேசியை அழித்து 'கேசவன்' என்ற திருநாமம் பெற்றவன்; ஒளிமிக்க அணிகளை வைத்தற்குரிய செப்பு போன்றவன்; திருமகள் கேள்வன்; பவளத்தின் ஒளியை ஒத்திருப்பவன்; ஏழுலகங்கட்கும் நாயகன்; கால தத்துவன்; திருவாழி ஏந்திய திருக்கையன்;அந்தணர்களின் கல்விக்குப் பொருளாக இருப்பவன் (6). எப்பொழுதும் முற்றிலும் மன நிறைவுடையவன்; திசை நான்முகனுக்குத் திருத்தமப்பன்: மூவரில் முதல்வன்; பேரொளி வீசும் திருமேனியை 5. திருமங்கையாழ்வார் இத்தலத்தில் வந்து இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடித் துதிக்கையில், திருநின்றவூர்ப் பத்தராவிப் பெருமாள், முன்பு திருக்கடல் மல்லையில் ஒரு பாடல் பெற்றது போதாதென்று மீட்டும் அவ்வூரிலுள்ள நாய்ச்சியாரான என்னைப் பெற்ற தாயாரால் நினைவூட்டப்பெற்றவராய், ஆழ்வாரெதிரில் வந்து காட்சியளிக்க, ஆலி நாடர் 'நின்றவூர் நித்திலத் தொத்தினை,.... கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே' (பெரி. திரு. 7.10:5) என்று அப்பிரானையும் சேர்த்துத் துதித்தனர் என்பதை அறிக.