பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன மங்கைக் கற்பகம் 169 யுடையவன்; மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் தலைவன்; சிவனைக் கூறுடம்பாகக் கொண்டவன்; அரி என்ற திருநாமமுடையவன்; எல்லாப் பொருள்களும் தன்னிடத்தில் பொருந்தும்படியான முழுமுதற் கருத்தன் (7). கன்றினால் கனியுதிர்த்தகாளை, பூதனையின் நஞ்சு தீட்டிய முவையுடன் அவளுடைய உயிரையும் உண்ட சிறுவன்; இராவணனை மாய்த்த வீரன்; அன்பர்கட்கு ஆரா அமுதம் போன்றவன்; நச்சுவார் உச்சிமீது நிற்கும் நம்பி, கஞ்சனைக் காலனுலகிற் கனுப்பிய காளை (8). இசைபோல் இனியன்; இசையின் சாரமானவன்; பாலினுள் நெய்போல் மறைந்திருக்கும் பான்மை யன்; நித்திய விபூதிக்கு நாதன், பேரொளி வீசும் திருமேனியன்; வேள்வி சொரூபி, விளக்கொளி போன்ற சுய ஒளியை யுடையவன்; பூமிபோன்ற பொறுமையுடையவன்; மலை போல் அசைக்க ஒண்ணாதவன்; வேண்டுமிடங்கட்கு வரு வித்துக்கொள்ளவல்ல அலை நீரினைப் போன்றவன்; அடியவ ரிடத்து பேரவாக் கொண்டவன்; சிறந்த ஞானவான்; வைதிகர் கட்குக் கண்போன்றிருப்பவன் (9). இப்படிப்பட்ட எம்பெரு மானைக் கண்ணமங்கையில் கண்டு கொண்டதாகக் களிப் பெய்துகின்றார் ஆழ்வார். 'நலமந்த மில்லதோர் நாடாகிய திருநாட்டிற்குச் சென்று காண வேண்டிய பரமபுருடனான-புருடோத்தமனை-இந்த நிலத்தில், திருக்கண்ண மங்கையில் காணப்பெற்றேன்’ என்று ஆவலுடன் ஆழ்வார் அருளிச் செய்த திருமொழியை நன்கு ஒதி உணர்பவர்கள் விண்ணுலகில் தேவர்களாய்த் திகழ்வார் என்பதுடன் பலன் உரைத்துத் தலைக் கட்டுகின்றார் ஆழ்வார். எம்பெருமானை நோக்கியும் பேசுகின்றார்: வெண்சங்க மேந்திய கண்னனே, உனக்கும் இத்திருமொழியில் ஆதரம் உண்டாகில் எனக்குச் சீடனாகவிருந்து கற்கவேண்டுங்காண்” என்கின்றார். அவ்வளவு சீரிய பொருள் குடிகொண்டதாம் இத்திருமொழி என்பது ஆழ்வாரின் திருவுள்ளம். இதன் சொல்லின்பமும் பொருளின்பமும் எம்பெருமானையும் வணங்கப் பண்ணி ஈடுபடுத்தும் என்க. 'ஒரு வளமிஷ்டன்பாடே ஸ்ாந்தீபிநிபாடே தாழநின்று அதிகரிக்கக் கடவ அவனுக்குத் திருமங்கையாழ்வார்பாடே அதிகரிக்கை தாழ்வோ?’ என்பது பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்கியானக் குறிப்பு. இராமா வதாரத்தில் வவிஷ்ட சீடனனென்றும் கிருஷ்ணாவதாரத்தில்